டப்பிங் படங்கள் மற்றும் வாலிப வயோதிக அன்பர்களுக்காக மட்டும் ரகஸியமாக ரிலீஸான சில படங்கள் தவிர்த்த 2012-ல் வெளியான 137 படங்களின் பட்டியல் இது. அவைகளையும் சேர்த்தால் கடந்த ஆண்டில் வெளியான படங்களின் எண்ணிக்கை 173 ஆகக்கூட இருக்கலாம்.
2011 – ஒரு திரைப்பார்வை
2012 - திரைப்பார்வை- என்ன செய்வது நமக்கும் பொழப்பு ஓடவேண்டுமே?
- Wednesday, 02 January 2013 00:16
- administrator
- Hits: 446
‘அவனும் நான் தான் ,இவனும் நான் தான்
- Wednesday, 08 February 2012 13:41
- administrator
- Hits: 1640
வெகுசிலரைத்தான் சினிமாவில் அவதாரம் போல் பார்த்தார்கள். அப்படி அவதாரமாய் வந்தார் பாலா.
எழுத்து எத்தர் எஸ்.ராமகிருஷ்ணர்
- Wednesday, 11 January 2012 16:44
- administrator
- Hits: 1846
ஆமை அமீனா வரிசையில் இப்பொழுது எஸ்.ராமகிருஷ்ணன் பெயரும் புதிதாக இணைக்கப் பட்டிருக்கிறது.
இதுவரை தமிழ் சினிமாவிற்கு 100 கோடி ரூபாய் வரை நஷ்டம் உருவாக்கிக் கொடுத்திருப்பவர் என்ற உயரிய அந்தஸ்த்தில் இருக்கிறார் இவர்.
பாப்கார்ன், ஆல்பம், பாபா, பீமா, உன்னாலே உன்னாலே, தாம்தூம், மோதி விளையாடு, சிக்கு புக்கு, அவன் இவன்,யுவன் யுவதி என அந்தத் தோல்வி வரிசை நீண்டு செல்கிறது.
சென்ற ஆண்டு மட்டும் அவன் இவன், சிக்கு புக்கு, யுவன் யுவதி போன்ற படங்களில் பணியாற்றி இவர் விளைவித்த நஷ்டம் சுமார்30 கோடி.
சர்வதேச அளவில் இத்தனைத் தோல்விப் படங்கள் எழுதிய எழுத்தாளர்கள் இருக்கிறார்களா என்பதை உலக சினிமாவைக் கரைத்துக் குடித்த ராமகிருஷ்ணன் தான் சொல்ல முடியும். நமக்கு அது அவசியம் இல்லாதது.
ராதா மோகனராகத்தில் ஒரு ‘பயணம்’
- Friday, 06 January 2012 18:24
- administrator
- Hits: 1945
வண்ணநிலவனுக்கும், வண்ணதாசனுக்கும் கிடைக்காத சாகித்ய அகாடமி ஒரே நாவலில் சு.வெங்கடேசனுக்கு கிடைத்த மாதிரி சினிமாவில் சிலர், சுமாரான ஒரே படத்தில் உயரக்கொண்டு போகப்பட்டுவிடுகிறார்கள். [உ.ம் ‘சுப்ரமணியபுரம்’ சசிக்குமார்.
வெற்றி மேல் வெற்றி மாறன்
- Monday, 14 April 2008 07:38
- administrator
- Hits: 1674

சச்சின் சில மேட்ச்களில் ஓபனிங் பேட்ஸ்மேனாக களம் இறங்கி முதல் பந்தையே ஒரு ஃபோர் தட்டி விட்டு விளையாட்டைத் துவங்குவார். அது இனிமையான துவக்கமாக இருக்கும்.
2011 ஐ வெற்றிமாறன் ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் அப்படித்தான் துவங்கி வைத்தார்.
துகிலுரிந்திருக்க வேண்டும் தெய்வத்திரு[ட்டு] மகளை
- Wednesday, 08 February 2012 13:26
- administrator
- Hits: 1469
2011 திரைப்பார்வை ’ குறித்து கடந்த ஆண்டில் வெளியான 149 நேரடிப்படங்களில் சுமார் 30 படங்களைப் பற்றியாவது அலசி விட வேண்டும். அதுவும் ஜனவரி மாதத்துக்குள்ளாக அத்தனையையும் எழுதி முடித்து விடவேண்டும் என்று திட்டமிட்டோம்.
ஆனால் நினைப்பது ஒண்ணு நடப்பது ஒண்ணு அதனால முழிக்குது தமிழ்சினிமா.காம் கண்ணு கதைதான் இதிலும் நடந்தது.
திகைக்க வைத்த ’எங்கேயும் எப்போதும்’
- Wednesday, 11 January 2012 17:02
- administrator
- Hits: 1937
சில படங்களின் டிஸைன்களைப்பார்க்கிற போதே, இந்தப்படம் சம்திங் ஸ்பெஷல் என்று மனசுக்குள் மணி அடிக்கும்.’ ‘எங்கேயும் எப்போதும்’ பட விளம்பர டிஸைன்களைப் பார்த்தபோது, மணி என்ன சின்ன அலாரம் கூட அடிக்கவில்லை.
படத்தின் ஹீரோ ஜெய் வரிசையாக தோல்விப்படங்களைக்கொடுத்து, ரொம்ப சின்ன வயசிலேயே ரிடையர் ஆகும் ஸ்டேஜில் இருந்தார். இன்னொரு ஹீரோவோ புதுமுகம். ஆக படத்துக்கு இருந்த ஒரே கவர்ச்சி அது
எங்கிருந்தோ வந்தார் தியாகராஜன் குமார ராஜா.
- Friday, 06 January 2012 18:10
- administrator
- Hits: 2244
உலகசினிமாவை சில மொள்ளமாரிகள் கதை திருடுவதற்காகப் பார்ப்பார்கள். சில மேன்மையானவர்கள் தனது கலை ஆளுமையை மேம்படுத்திக் கொள்வதற்காகப் பார்ப்பார்கள். தியாகராஜன் குமாரராஜா இதில் இரண்டாம் வகை, உலக சினிமாவின் பல அழகிய சலனங்களை தன் முதல் படத்திலேயே கொண்டு வந்து சேர்த்து அழகு படுத்தியிருந்தார் அந்த யாரிடமும் உதவி இயக்குனராகப் பணி செய்யாத ராஜா.
யுத்தநாயகன் மிஷ்கின்
- Saturday, 31 December 2011 21:05
- administrator
- Hits: 16490
இரவிலும் கருப்பு கண்ணாடியோடு இருப்பவர் , தூங்கும் போதும் டாய்லெட்டிலும் கூட கண்ணாடியோடு இருப்பவர் என்றெல்லாம் கேலி செய்யப்படும் மிஷ்கின் ஃபிலிம் லாங்குவேஜ் எனப்படும் திரைமொழியில் மிருகபலம் கொண்டவராக மெருகேறிகொண்டே இருக்கிறார்..
ஆடாமல் ஜெயித்தார் வெங்கட் பிரபு !
- Tuesday, 31 January 2012 11:09
- administrator
- Hits: 1393
தமிழ் சாகசப் படங்களின் பட்டியலில் மங்காத்தாவிற்கு நிச்சயம் சிறப்பானதொரு இடம் இருக்கிறது.
அட்டகாசம் என்று சொல்லும் படியான சண்டைக் காட்சிகளும், அபாரம் என்றும் சொல்லும் படியான சாகசக் காட்சிகளும் படமெங்கும் நிறைந்திருந்தன.
ஆனாலும் யதார்த்தமான கதை மாந்தர்களே இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கியவர்கள் என்று சொல்ல வேண்டும். மங்காத்தாவின் கதையிலும் கதாபாத்திரங்களிலும் வெளிப்பட்ட யதார்த்தம், வெங்கட் பிரபு பற்றிய ‘விளையாட்டுப் பையன்’ என்ற சித்திரத்தை முற்றிலும் கலைத்துப் போட்டு விட்டது.
மௌனகுரு: குருவைத் தொடராத சீடன்
- Wednesday, 11 January 2012 17:20
- administrator
- Hits: 1889
2011 டிசம்பரில் வெளிவந்த மௌனகுரு நொந்துகிடந்த தமிழ் சினிமாவிற்கு ஒரு இன்ப அதிர்ச்சியை வழங்கியது. ஆரம்பத்திலிருந்து எந்த எதிர்பார்ப்பையும் உருவாக்காத படமாக இருந்தது. வெளியான போதும் கூட. ஆனால் திரையில் பார்த்தபோது தமிழில் உருவாகத் தொடங்கியிருக்கும் ஒரு புதிய போக்கின்
தொடர்ச்சியை உறுதிப்படுத்தும் ஆரோக்கியமான முயற்சியாகத் தெரிந்தது. சமகால வாழ்க்கையின் எளிமையான சந்தர்ப்பங்கள், சூழல்கள், ஆசைகள், பேராசைகள், பொறாமைகள், தற்செயல்களினூடாக ஒரு சாமான்ய இளைஞனின் அனுபவங்களாகப் பின்னப்பட்ட கதை. ஹீரோ எண்ட்ரி,




கேப்டன் விசயகாந்த் அவர்களுக்கு தமிழிலேயே பிடிக்காத கெட்டவார்த்தை மாதிரி, எனக்கு தமிழிலேயே பிடித்த, எத்தனை முறை பயன்படுத்தினாலும் அலுத்துப்போகாத..
’எனவே என்னையும் சக பத்திரிகையாளர்களயும் வெரைட்டியாக வேட்டையாடிய ‘சேட்டை’ பட சமாச்சாரத்துக்கு வருவோம்.இந்தியில் ‘டெல்லி பெல்லி’ என்ற பெயரில் ரிலீஸாகி’
‘தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன் பாபுவின் தயாரிப்பில் அவரது மகள் லட்சுமி மஞ்சு தயாரித்து நடித்திருக்கும் ‘கொண்டேலோ கோதாவரி’ என்கிற. 
தினமும் பஸ் பிடித்து, பல கி.மீ. நடந்து, வேர்த்து, விறுவிறுத்து வேலைக்குப் போய் மாங்கு மாங்கென்று 12 மணி நேரத்திற்கும் மேல் வேலை பார்த்து, மேலாளரிடம் திட்டு வாங்கி...
’
’