கணேஷ் விநாயக், ஸ்டில் போட்டோகிராபராக சினிமாவில் அறிமுகமாகி,’முப்பொழுதும் உன் கற்பனைகள்’ படத்தின் மூல டைரக்டராக அறிமுகம் ஆனவர்.’மு.உன்.க’ படத்தயாரிப்பாளருக்கு, படம் துவங்கிய சில நாட்களிலேயே தானே ஏன் இயக்குனராகிவிடக்கூடாது’ என்ற சபலம் வரவே, இயக்குனர் பொறுப்பிலிருந்து கணேஷ் கழட்டி விடப்பட்டார்.
புத்தி உள்ள புள்ள எங்கே போனாலும் பொழச்சிக்கும்’ என்பது போல் அவருக்கு மீண்டும் இயக்குனராகும் வாய்ப்பு பெரிய இடத்திலிருந்து கிடைத்திருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, கணேஷிடம் கதை கேட்ட அருள்நிதி, உடனே கையோடு தன் தந்தையிடம் அழைத்துப்போய் அட்வான்ஸ் வாங்கிக்கொடுத்தாராம்.
இத்தனைக்கும் அது 4 முக்கிய பாத்திரங்கள் கொண்ட சப்ஜெக்ட். உதயநிதியோடு, பவன், தருண் சத்திரியா,ஆடுகளம்’ முருகதாஸ் ஆகியோர் நடிக்கும் இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்துக்கு ஹீரோயின் தேடும் படலம் தீவிரமாக நடைபெறுகிறது.
அந்தப்பரிசீலனையில் முதலில் இருந்தவரான ‘நான் கடவுள்’ பூஜாவை அணுகிய போது, பாலா தன்னோட படம் முடியிற வரை வேற எந்தப்படத்திலயும் நடிக்கக்கூடாதுன்னு உத்தரவு போட்டிருக்கார். ஸாரி பாஸ்அதை மீறுனா பாலா ரொம்ப ஃபீலாவாரு’’ என்றாராம்.
அடுத்த சாய்ஸாக, ‘பில்லா 2’ பார்வதி ஓமனக்குட்டனை அணுகலாமா என்று யோசித்து வருகிறார்களாம்.‘’ஸாரி பாஸ் பில்லா2 ரிலீஸுக்கு முந்தி வேற படத்துல கமிட் ஆனா அஜீத் ரொம்ப டல்லாயிருவாரு’ என்பதுபோல் ஓமனக்குட்டனும் ஏதாவது காரணம் சொல்லுவாரோ?