சினிமாவிலும் சரி, அதற்கு வெளியிலும் சரி, காமெடி நடிகர் சந்தானம் தனது நண்பர்களை ‘மச்சான்’ போட்டே அழைப்பார். அப்படிப்பட்ட மச்சான்ஸ்கள், படித்து விட்டு, தேன் குடித்த நரி போல் மாறவேண்டிய செய்தி இது.
கார்த்தியுடன் தொடர்ந்து கூட்டணி குருமா கிண்டிவரும் சந்தானம், சுராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் ’அலெக்ஸ் பாண்டியன்’ படத்திலும் அவரது ஒரிஜினல் மச்சானாகவே நடிக்கிறார்.
இதில் சந்தானத்தின் சொந்த தங்காச்சியாக, பெயரிலும் தோற்றத்திலும், அனுஷ்காவுக்கு பெருங்குழப்பத்தை ஏற்படுத்தும், அகன்ஷா என்ற திருப்பதி லட்டு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார்.
‘படத்துல இன்னொரு ஹீரோயினா அனுஷ்கா இருந்தாலும் சந்தானத்தோட தங்கச்சியா வர்றதுனால எனக்கும் படத்துல பெரிய முக்கியத்துவம் இருக்கு’’ என்ற அகன்ஷாவிடம், வடிவேலு ஒரு படத்துல சொந்த அக்காவையே அடமானம் வச்சி பேக்கரி கடை நடத்துன மாதிரி, சந்தானம் உங்கள வச்சி எதும் காமெடி பண்றாரா என்று கேட்டால் ,’’ படத்தோட கதையைப்பத்தி எனக்கு ஒரு வரி கூட தெரியாது. டைரக்டர் சொல்றதை அப்பிடியே நடிச்சிட்டு வர்றேன்’ என்றபடி பேக்கரி கடையில் காணாமல் போன தங்கச்சி மாதிரியே முழிக்கிறார்.