இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்தின் படுதோல்விக்குப்பின் கம்பெனிகள் பல ஏறி இறங்கிய இயக்குனர் சிம்புதேவனுக்கு கடைசியாய் புகலிடம் தந்தவர் நடிகர் தனுஷ்.
ஓரளவுக்கு நல்ல இயக்குனர் என்று பெயரெடுத்திருக்கும் சிம்புவுக்கு, பெரிய மைனசாக அமைந்தது அவரது படங்களின் முரட்டு பட்ஜெட் தான் என்பதை உணராத சிம்பு, தனுஷுக்காக ரெடி செய்து வைத்திருந்த ‘மாரீசன்’ கதையின் பட்ஜெட்டும் சுமார் 20 கோடியை ஒட்டியதாகவே அமைந்தது.
இந்த பெரும் பட்ஜெட் காரணமாகவே, பல நிறுவனங்களில் வெயிட்டிங் லிஸ்டில் கிடந்த ‘ மாரீசன்’, தனுஷின் ‘3 பட ப்ளாப்புக்கு பிறகு இல்லை என்றே ஆகிவிட்டது.
சுமார் ஒரு வருட காத்திருப்புக்குப்பின், இனி தனுஷை நம்பி பயனில்லை என்று முடிவெடுத்த சிம்புதேவன், பழைய புலிகேசி கதையை நீ யோசி’ என்றபடி வடிவேலு வீட்டுக்கதவை தட்டியிருக்கிறாராம்.
நீயும் டம்மி நானும் டம்மி இந்த நிலைமைக்கெல்லாம் காரணம் மம்மி’ என்று பாடியபடி சிம்புவை வரவேற்ற வடிவேலு, இரண்டாம் புலிகேசியை பார்ட்-2 வாக எடுக்கலாம் வாங்க’ என்று கைகுலுக்கியிருக்கிறாராம்.
இப்போது இருவரும் இணைந்து ‘2-ம் இரண்டாம்புலிகேசியை தயாரிக்க, வலுவான பேங்க் பேலன்ஸ் கொண்ட ஒரு ‘புன்னகை மன்னனை தேடி வருகிறார்கள்.