ஒரு வாரப்பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இயக்குனர் கவுதம் மேனன், ’சமந்தா என் செல்ல டார்லிங்’ என்று பேட்டி கொடுத்தாலும் கொடுத்தார், ஆளாளுக்கு இருவரும் காதலிக்கிறீர்களா என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள் என்று செல்லம் சிணுங்குகிறார் சமந்தா.
மணிரத்னத்தின், ‘கடல்’ படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் சமந்தா, ’’ராசியில்லாதவளாக இருந்த என்னை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றவர்’ என்கிற ஸ்பெஷல அந்தஸ்தை அவருக்கு மனசில் தந்திருப்பதைத்தாண்டி, எனக்கும் அவருக்கும் இடையில் வேறு எதுவுமே இல்லை’’ என்று சத்தியம் செய்கிறார்.
‘’மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கும் வகையில் இந்த வருட ரிலீஸுக்கு மட்டுமே கைவசம் ஆறு படங்கள் வைத்திருக்கிறேன். இதில் கவுதம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தியில் இயக்கிவரும்’நீ தானே என் பொன் வசந்தமும்’ அடக்கம். இதில் தமிழிலும்,தெலுங்கிலும் மட்டும் நான் நடிக்கிறேன். இந்திக்கு வேறு ஒரு ஹீரோயினைப் போட்டுக்கொள்ளுங்கள் என்று கவுதமிடம் எவ்வளவோ கெஞ்சிப்பார்த்தேன்.அவர் ஒப்புக்கொள்ளவில்லை. எனக்கு தமிழும், தெலுங்கும் போதும். இந்தியில் சோபிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் சுத்தமாக இல்லை’’ என்று வெளிப்படையாக பேசும் சமந்தா, மணிரத்னத்தின் படத்தைப்பற்றி பேச ஆரம்பித்தாலே,’ நீங்க யாரு, இதுக்கு முந்தி உங்களப்பாத்ததே இல்லையே’ என்றபடி எஸ்கேப் ஆகிறார்.