தமிழைப்போலவே மலையாளத்திலும், பழைய படங்களை ரீமேக் பண்ணும் கலாச்சாரம் ஸ்டார்ட் ஆகிவிட்டது. அந்த வரிசையில், கே.எஸ்.சேதுமாதவனின் இயக்கத்தில் 1974-ம் ஆண்டு வெளிவந்த ’ சட்டக்காரி’ படம், படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது.
பழைய ‘சட்டக்காரி’யில் அதிரடியாக நம்ம லட்சுமி நடித்திருந்த கேரக்டரில் இப்போது நம்ம கருவாச்சி’ பூர்ணா நடிக்கிறார்.’ சட்டக்காரி’யை ரீமேக் பண்ணப்போகிறேன். அதில் லட்சுமியின் பாத்திரத்தில் நடிக்கிறாயா என்று இயக்குனரும், கே.ஸ். சேதுமாதவனின் மகனுமாகிய சந்தோஷ் கேட்டபோது, நான் ஒரு கணம் ஆடிப்போய்விட்டேன். சட்டக்காரி’ ரிலீஸான சமயத்தில் பலரையும் அது உலுக்கிய படம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதிலும் குறிப்பாக லட்சுமியின் நடிப்பு அனைவராலும் சிலாகிக்கப்பட்ட ஒன்று.
இதுவரை சினிமாவில் குறிப்பிட்டு சொல்லும்படி எதுவும் அமையாத நான், சாதிப்பதற்கென்றே கிடைத்த வரம் இந்தப்படம், என்பதை மனதில் இருத்திக்கொண்டே நடித்தேன்.ஷூட்டிங் என்பதை மறந்து படத்தின் பல காட்சிகளில் அழுது குவித்தேன்.அதிலும் க்ளைமேக்ஸ் காட்சியில், மொத்த யூனிட்டுமே என்னைத்தேற்ற பெரும்பாடு பட்டார்கள்’என்று கூறும் பூர்ணாவுக்கு இப்போது கைவசம் தமிழில், நடித்துமுடித்த’ கருவாச்சி’ தவிர ஒரு படம் கூட இல்லையாம்.
‘நடிகர் ஜெய்யோடு ஜோடி போட்டு, சிலபல ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட ‘அர்ஜுனன் காதலி’க்கு மீண்டும் உயிர் வரப்போகிறதென்று பேசிக்கொள்கிறார்கள். வந்தால் பார்க்கலாம்’ என்கிறார் விரக்தியோடு.