‘மைனா’வுக்குப் பிறகு சொல்லிக்கொள்ளும்படி உருப்படியான படங்கள் எதிலும் நடித்திராத அமலா பாலின் ஆட்டமும் ’ஸாரி கொஞ்சம் ஓவராக’ இருந்ததால், வந்த வேகத்திலேயே சொந்த ஊருக்கு பேக்-அப் பண்ணி அனுப்பப்பட்டார்.
இந்நிலையில், டைம் சரியில்லாததாலோ என்னவோ, ‘நான் கடவுள்’ மற்றும், ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படங்களைத்தயாரித்த வாசன் விஷுவல்ஸ் சீனிவாசன், தனது அடுத்த படத்துக்கு ஹீரோயினாக அமலாவை அணுகியுள்ளார்.
சமுத்திரக்கனி இயக்க, ஜெயம் ரவி நடிக்கும் இப்படத்துக்கு, தொடர்ந்து விடாமல் நயன் தாராவை துரத்தி டயர்டான நிலையில், அடுத்த சாய்சாக அமலாபாலை யோசித்தார்களாம்.
‘நம்ம மீடியா ஆட்கள் அந்தப்பொண்ணு மேல கொலவெறியில இருக்காங்க. பாத்து முடிவு பண்ணிக்குங்க’ என்று, நயன் தாரா கிடைக்காத விரக்தியில், நாயகன் ஜெயம் ரவி ஒதுங்கிக்கொள்ள, சமுத்திரக்கனியும்,தயாரிப்பாளர் சீனிவாசனும் அமலாவை அணுகினார்களாம்.
‘நான் மலையாளம், தெலுங்குல ரொம்ப பிஸி. டமில்ப்படம் பண்றதுல அவ்வளவா இண்ட்ரஸ்ட் இல்ல.எனிவே ஒரு 80 லட்சம் சம்பளம் தர்றதா இருந்தா யோசிக்கலாம்’ என்று அமலா சொன்னபோது லேசாய் நெஞ்சைப்பிடித்த சீனிவாசனை கைத்தாங்கலாகப்பிடித்து, ‘பதட்டப்படாதீங்க சார்.இப்ப என்ன ஆகிப்போச்சி. த்ரிஷா இல்லைன்னா திவ்யா மாதிரி, அமலா இல்லைன்னா ஒரு கமலா’ என்று சமாதானப்படுத்திவிட்டு,’ சப்ஜெக்ட்ட முதல்ல கேட்டுட்டு அப்புறமா சம்பளத்தைப்பத்தி பேசும்மா’ என்று மறுபடியும் அமலாவுக்கு ‘நூல்’ விட்டுக்கொண்டிருக்கிறாராம் சாமர்த்தியக்கனி.