beatles-young

புகழ்பெற்ற பீட்டில்ஸ் (Beatles) இசைக்குழுவின் முதல் அமெரிக்கப் பயணத்தின் வீடியோ தொகுப்பு 48 ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் கிடைத்துள்ளதாம்.

12 பாடல்களடங்கிய இந்த தொகுப்பு 1964ல் வாஷிங்டன் கலோசியம் அரங்கத்தில் படம் பிடிக்கப்பட்டு ஒரு மாதம் கழித்து மார்ச் மாதம் அமெரிக்க டெலிவிஷனில் நாடெங்கும் இருந்த பீட்டில்ஸ் ரசிகர்களுக்காக ஒளிபரப்பப்பட்டது.

அப்போதே சுமார் 20 லட்சம் அமெரிக்கர்கள் அதைக் கண்டுகளித்தனர் எனக் கூறப்பட்டது. ஆனால் அந்த டேப் பின் காணாமல் போய்விட்டது.

தற்போது மீண்டும் கிடைத்துள்ள அந்த மாஸ்டர் டேப்பை டிஜிடல் முறையில் சீரமைத்து ஒன்றரை மணிநேர டாக்குமெண்டரி படமாக வரும் மே மாதம் நியூயார்க்கில் திரையிடப் போகிறார்கள்..

இதில் ஷீ லவ்ஸ் யூ(She Loves You) மற்றும் ட்விஸ்ட் அண்ட் ஷெளட் (Twist and Shout) போன்ற பீட்டில்ஸ் குழுவின் புகழ்பெற்ற பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இத்துடன் பலரின் நேர்காணல்களும் இடம் பெறுகின்றன.

ஜான் லென்னான், பால் மெக்கார்ட்டினி போன்ற பெரும் கலைஞர்கள் பீட்டில்ஸ் குழுவில் அங்கமாக இருந்தவர்களே.

beatles-middleage

Related Images: