தலப்பாக்கட்டு பிரியாணிக்காரர்களின் வயிறு கலங்க வைக்கும் ஒரு செய்திதான், இப்போது கோடம்பாக்கம் முழுக்க மணம் வீசி வருகிறது.
அந்த பிரியாணியின் பெயர் ‘தல’ வரிந்து கட்டும் பிரியாணி.
கேக்கும்போதே நாவில் எச்சில் சுரக்கும் அந்தக்கதையை ‘பில்லா2’ படத்தின் நாயகி பார்வதி ஓமனக்குட்டனின் வார்த்தைகளிலேயே கேளுங்கள்.
‘’பில்லா2 படப்பிடிப்பின் கடைசி சில தினங்களுக்கு முன் ஒரு நாள் , இன்றைய
மொத்த யூனிட்டுக்கான பிரியாணியை அஜீத் சமைத்துக்கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். நான் சற்றே வியந்து சமையல் நடக்கும் இடத்துக்குபோனேன்.அவர் ஒரு சேரில் அமர்ந்து கொண்டு ஐடியா கொடுப்பார். அதை யாராவது ‘எக்ஸிகியூட்’ பண்ணுவார்கள் என்பது போல நினைத்துக்கொண்டுதான் நான் சமையல்கட்டு பக்கமே போனது. ஆனால் யாரையும் ’தலயிட’ விடாமல் தனி ஒரு ஆளாக மட்டன் பிரியாணி சமைத்துக்கொண்டிருந்தார் தல அஜீத்.
ஏற்கனவே அவர் மேல் உயர்ந்திருந்த மதிப்பு ,சாப்பிட அமர்ந்த போது இன்னும் பல மடங்கு அதிகமானது. அடுத்த படத்துக்கு அஜீத் என்னை அழைப்பார் என்பதற்காக, சத்தியமாக நான் இதைச்சொல்லவில்லை. நான் அதுவரை அப்பிடி ஒரு பிரியாணி சாப்பிட்டதில்லை என்று சொல்லுமளவுக்கு, அந்த பிரியாணி அவ்வளவு டேஸ்டாக இருந்தது.என்னைப்பொருத்தவரை அஜீத் வெறும் ஸ்டாராக மட்டுமின்றி, மனிதராகவும் சூப்பரானவர்’’ என்று சகட்டுமேனிக்கு புகழ்ந்து தள்ளுகிறார் பார்வதி பிரியாணிமட்டன்.