ப்ராட் பிட்(Brad Pitt)ம் ஏஞ்சலினா ஜோலியும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருக்கிறார்கள். 2005 முதலே காதலித்து சேர்ந்து வாழும் இந்த ‘ப்ராஞ்சலினா’ ஜோடிக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள்.
முதலாவதாய் நமீபியாவில் பிறந்தது ஷிலோவா என்கிற பெண்குழந்தை. கடைசியாய் 2008ல் பிறந்த இருவர் இரட்டையர்கள். ஒரு ஆண், ஒரு பெண்.
இவர்கள் மூன்று பேருடன் சேர்த்து இன்னும் மூன்று குழந்தைகளை தத்தெடுத்தும் வளர்க்கிறார்கள்.
முதல் பையன் மேடாக்ஸை கம்போடியாவிலிருந்தும், இரண்டாவது பெண் குழந்தை சகாராவை எத்தியோப்பியாவிலிருந்தும், மூன்றாவது பையன் பாக்ஸை வியட்நாமிலிருந்தும் தத்தெடுத்திருக்கிறார்கள்.
இப்படி வித்தியாசமான குடும்பத்தைக் கொண்ட இந்த ஜோடி இப்போது தான் திருமணம் செய்து கொள்ள நிச்சயம் செய்து கொண்டுள்ளார்களாம்.
2009ல் ஹாலிவுட்டிலேயே அதிகம் சம்பளம் வாங்கிய நடிகையாக ஏஞ்சலினா இருந்தார். இவர்களது முதல் குழந்தை ஷிலோவாவின் முதல் போட்டோவை வெளியிட மட்டும் ஒரு பத்திரிக்கை நான்கு மில்லியன் டாலர் பணம் கொடுத்தது.
நடிகை ஜூலியா ராபர்ட்ஸ் பிராட் பிட்டுடன் ‘தி மெக்ஸிகன்’, ‘ஓஷன்ஸ் லெவன்’ போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
இவர்களது நிச்சய செய்தி பற்றி கேள்விப்பட்டதும் மிகுந்த சந்தோஷமடைந்த ஜூலியா திருமணத்தன்று அவர்களது ஆறு குழந்தைகளையும் தானே பார்த்துக் கொள்வதாக வாக்களித்திருக்கிறாராம்.
இவர்களது திருமணம் தான் ஹாலிவுட்டில் தற்போது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள நிகழ்வு.