கே: ‘பெப்ஸியை உடைக்கப்போகிறோம் என்று துவங்கி தயாரிப்பாளர்களே தங்களுக்குள் அடித்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்களே ? பாலாஜி, பழையவண்ணாரப்பேட்டை.
பொதுஜனங்கள் மத்தியில் தயாரிப்பாளர்களைப் பற்றி இருக்கக்கூடிய இமேஜை நாளுக்கு நாள் புல்டோசர் வைத்து தகர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.இதுபோக வழக்கம்போலவே, அரசியலும் தயாரிப்பாளர் சங்கத்துக்குள் தனது வலதுகாலை உள்ளே வைத்து நுழைந்துவிட்டது.அந்தோ பரிதாபம்.
விஷாலின் நிலவரம் எப்படி இருக்கு கிளியாரே? ஆள் இருக்கிற இடமே தெரியவில்லையே? ராஜேந்திரன், வேலூர்.
இப்போதெல்லாம் ஒரு பெரிய வெற்றி, அந்த நடிகர்தான் நம்பர் ஒன் என்ற தோற்றத்தையும், ஒரு பெரும் தோல்வி அப்படி ஒரு நடிகர் இண்டஸ்ட்ரியிலேயே இல்லை என்பதுபோலவும் காட்டுகிற சூழல் நிலவுகிறது. விஷாலுக்கோ ‘அவனா இவன்’ ’தேராத விளையாட்டுப்பிள்ளை’ என்று தொடர் தோல்விகள். சொந்தக் கம்பெனி கைவசம் இருப்பதால் வண்டி தொய்வில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.
பரபரப்பாக அடிபட்ட த்ரிஷாவின் திருமணச்செய்தி, இப்போது கொஞ்சம் டல்லடிக்க ஆரம்பித்திருக்கிறதே? கணேசன்,ஈரோடு.
தன் மனசுக்குப்பிடித்த மாப்பிள்ளை அமையும் வரை திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் த்ரிஷாவுக்கு இல்லையாம்.கொஞ்சம் அஜீத், கொஞ்சம் விஜய், கொஞ்சம் விக்ரம்,கொஞ்சம் ராணா, கொஞ்சம் சிம்பு, கொஞ்சம் அன்பு இவ்வளவும் கொண்ட அதே சமயம் சுவிஸ் பேங்கில் முரட்டு அக்கவுண்ட் வைத்திருக்கிற மாப்பிள்ளை வேண்டுமாம்.அப்பிடி யாராவது உங்க ஊர்ப்பக்கம் இருந்தா சொல்லி அனுப்புங்க கணேசன்,
சில டைரக்டர்கள் ஆங்கிலப்பட டிசைன்களை, கொஞ்சம் கூட வெக்கமில்லாமல், அப்படியே காப்பி அடிக்கிறார்களே?
ராமநாதன்,கம்பம்.
உங்க கேள்வி ரொம்ப சின்னப்புள்ளத்தனமா இருக்கு மிஸ்டர் ராமநாதன். படத்தையே மொத்தமா சுடுறாங்க.அதுல டிசைனையும் சேர்ந்து திருடுனா என்ன தப்பாம்? அவங்க என்ன வச்சிக்கிட்டா வஞ்சனை பண்றாங்க?
தாய் எட்டடி பாய்ஞ்சா குட்டி பதினாறு அடி பாயும்கிற பழமொழி, வைரமுத்துவோட சன் மதன்கார்க்கிக்கு பொருந்துமா? பாஸ்கர்,பெரியகுளம்.
மைலார்ட் இந்த கேள்விகேட்டவரோட பேரு, ஊரைப்பாக்குறப்ப, இதுல ஏதோ உள்குத்து இருக்க மாதிரியே தெரியுது. எனவே கேள்வியை சாட்சாத் வைரமுத்து அவர்களுக்கே மெயில் பண்ணி அடுத்த வாரம் அவரிடமிருந்து தக்க பதிலை வாங்கித்தருகிறேன். அதுவரை விடை பெறுகிறேன்.