இயக்குனர் பாலாஜி சக்திவேலின் ‘வழக்கு எண் 18/9 பட புகைப்பட கேலரியைப் பார்த்தவர்களுக்கு, அதில் வழக்கமான சினிமா முகங்கள் ஒன்று கூட தென்படாதது சற்றே வியப்பைத் தரக்கூடிய அனுபவமாக இருந்திருக்கும்.அந்த வித்தியாசமான முகங்களில் ஒருவரும், பட நாயகியுமான ஊர்மிளா மஹந்தாவுடன் ஒரு நேர்காணல்.
கே: உங்கள் பெயரில் இருக்கும் மஹந்தா நீங்கள் அஸ்ஸாமைச் சேர்ந்தவர் என்கிறது.வழக்கு எண்ணில் சிக்கியது எப்படி?
ஆக்சுவல்லி நான் பூனே ஃபிலிம் இன்ஸ்டிடியூட் மாணவி. கோல்டு மெடலிஸ்டும் கூட. 2008-ம் ஆண்டு கோவாவில் நடந்த சர்வதேசப் படவிழாவுக்கு, என் சென்னை வகுப்புத் தோழியுடன் போயிருந்தேன். அவ்விழாவிற்கு பாலாஜி சக்திவேலும் வந்திருந்தார்.
படத்திரையிடல் முடிந்த ஒரு ஓய்வு நேரத்தில்,ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருந்த அவரைக்காட்டி, ’அவர் தான் ’காதல்’ படம் எடுத்தவர். தமிழ் சினிமாவுல முக்கியமான டைரக்டர்.போய் ஒரு வணக்கம் வச்சிட்டு வா. ஒரு வேளை அவரோட அடுத்த படத்தோட ஹீரொயினா ஆக்கினாலும் ஆக்குவார்’ என்று என்னைக் கலாய்த்து அனுப்பினாள்.
நானும் அவள் சொன்னபடியே, ஒரு வணக்கம் சொல்லிவிட்டுத்திரும்பிவிட்டேன்.
கே: ஒரு வணக்கம் வைத்ததற்காக கதாநாயகி வாய்ப்பு கொடுக்கிறவரா, பாலாஜி சக்திவேல். நானெல்லாம் இதுவரைக்கும் நூறு வணக்கங்களுக்கு மேல் வைத்திருப்பேன். ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட் வேஷம் கூட கொடுத்ததில்லையே?
ஏன் மிஸ்டர் அவசரப்பட்டு குறுக்க பேசுறீங்க?. வணக்கம் வச்சிட்டுப்போன மறுநாள், ஒரு படம் பாக்கக்கிளம்பிக்கிட்டிருக்கப்ப, பாலாஜி சாரோட அசிஸ்டெண்ட்ஸ் வந்து என்னோட போன் நம்பர், டீடெயில்ஸ் வாங்கிட்டுப்போனாங்க. அப்புறமா என்னை சென்னைக்கு வரச்சொல்லி, மூனு தடவை ஆடிசன் டெஸ்ட் எடுத்துதான், ஜோதி’ங்கிற சேரிப்பொண்ணு கேரக்டருக்கு செலக்ட் பண்ணாங்க.
கே:பாத்தா பணக்காரப்பொண்ணு மாதிரியே இருக்கீங்க. நீங்க எப்படி சேரிப்பொண்ணா?
என்னை செலக்ட் பண்ண உடனே, பாலாஜி சக்திவேல் சார், சென்னையில உள்ள பல சேரிப்பகுதிகளை விசிட் பண்ணச்சொன்னார். நான் தொடர்ந்து அவங்களோட பழகி, அவங்க பேசுற ஸ்டைல், பாடி லாங்குவேஜ் எல்லாத்தையும் கத்துக்கிட்டேன்.படம் பாருங்க. ஒரிஜினல் சேரிப்பொண்ணாவே வாழ்ந்திருக்கேன்.
கே: அடுத்து ஏதாவது கிளாமரான கேரக்டர் வந்தா நடிப்பீங்களா?
இது என்ன கேள்வி. அடுத்து தொடர்ந்து நான் சேரிப்பொண்ணாவே நடிச்சா, அடிச்சி துரத்தி விட்டுற மாட்டீங்களா? உலக சினிமா பாத்து வளர்ந்த கலகக்காரப் பொண்ணு நான். நல்ல கதை எதைக்கேக்குதோ அதைச் செய்ய நான் எப்பவுமே ரெடி.
நீங்க தமிழ்சினிமாவுல ஒரு மங்காத்தா ஆடாம போகமாட்டீங்க போல மஹந்தா.