படம் ரிலிசாவதற்கு முன்பு பிரஸ்மீட்களில் ஓவராய் அளந்து விட்டுவிட்டோமே என்கிற ஒரே காரணத்துக்காக ‘வேட்டையை இந்தியில் ரிமேக் பண்ணியே தீருவேன் என்று அடம்பிடித்த லிங்குசாமி ,அதன் பலனாக ,
மும்பையில் தொடர்ந்து சந்தித்த அவமானங்களால் சைலண்டாக கோடம்பாக்கம் திரும்பிவிட்டார் .
இந்த முயற்சிக்கு முதல்முட்டுக்கட்டை போட்ட பெருமை நடிகர் மாதவனையே சேரும். தமிழிலேயே தனக்கு கிடைத்த டம்மி கேரக்டரால் நொந்து போயிருந்த மாதவனை, லிங்கு அதே கேரக்டரை, இந்தியில் நடிக்க அழைத்தபோது சற்றும் தயவுதாட்சண்யம் பார்க்காமல் மறுத்த மாதவன், ‘தமிழ்லயே ஒழுங்கா ஓடாதபடத்தை ஏன் இந்தியில வேற எடுத்தே தீருவேன்னு அடம்புடிக்கிறீங்க. தோல்வியை ஒத்துக்கிட்டு அடுத்த வேலையை ஆரம்பிங்க சார்’ என்று அட்வைஸ் வேறு வழங்கினாராம். இந்த அட்வைஸ் சமாச்சாரம் இந்தி ‘வேட்டையில் நடிப்பதாக இருந்த சாஹித் கபூரின் காதுகளுக்குப் போகவே அவர் ‘நான் இந்த வருஷம் முழுக்கவே பிஸி. அதனால வேட்டையை அப்புறமா ஆடிக்கலாம்’ என்று கழண்டுகொண்டாராம்.
சாஹித் கழண்டுகொண்டதுமே அதிர்ச்சியடைந்து மூட்டைமுடிச்சுகளை பேக்-அப் பண்ணிக்கொண்டிருந்த லிங்குவுக்கு, மற்றொரு அதிர்ச்சி செய்தி, மேற்படி வேட்டையை தமிழில் தயாரித்து இந்தியிலும் தயாரிப்பதாக இருந்த யூ.டி.வி நிறுவனத்திடமிருந்து வந்தது.
‘இனி உங்களோடு சேர்ந்து படத்தயாரிப்பு வேலைகளில் ஈடுபடும் எண்ணம் எங்கள் நிறுவனத்துக்கு இல்லை. இந்த வாரம் ரிலீஸாகும் ’வழக்கு எண்’ படத்துக்கு அடுத்த படியாக நீங்கள் வாங்கியிருக்கும் ‘கும்கி’ பட விளம்பரங்களிலிருந்து எங்கள் நிறுவனத்தின் பெயரை எடுத்துவிடுங்கள். இவற்றையெல்லாம் விட முக்கியமாக ‘வேட்டையின் இந்தி ரீமேக் உட்பட்ட நாலைந்து புராஜக்டுகளுக்கான எங்கள் அட்வான்ஸ் பணம் உங்களிடம் உள்ளது. அதை எவ்வளவு நாட்களில் செட்டில் பண்ணுகிறீர்கள்என்பதை எங்கள் தகவல் கிடைத்த உடனே எங்களுக்கு தெரிவிக்க வேண்டுகிறோம்’ என்று கடுமையான தொனியில் நீளுகிறதாம் யூ.டி.வி.யின் அந்தக்கடிதம்.