விஜயின் ‘துப்பாக்கி’ சத்தத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் அவரது ரசிகர்களுக்கு ஒரு துண்டுச்செய்தி.
முதன்முறையாக, ஒரு ஹிந்திப்படத்தில், ஒரு பாடலுக்கு நடனமாட இருக்கிறார் உங்கள் விஜய்.
நம்ம நயன் தாராவின் முன்னாள் காதலர் பிரபுதேவா, தற்போது இந்தியில், அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்கும், ‘ரவுடி ரத்தோர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
தெலுங்கில் தொடர்ந்து அதிரிபுதிரியான 5 ஹிட்டுகள் கொடுத்து, மொத்த இண்டஸ்ட்ரியையும் திகைப்பில் ஆழ்த்திவரும், எஸ்.எஸ். ராஜமவுலியின் இயக்கத்தில் ‘விக்ரமார்க்குடு’ என்ற பெயரில் எடுக்கப்பட்டு, தமிழில் கார்த்தி நடிக்க, ‘சிறுத்தையாக’ மாறிய படமே இந்த ‘ரவுடி ரத்தோர்’.
இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கிவிட்ட பிரபுதேவாவுக்கு, மும்பையில், ஏ.ஆர். முருகதாஸுடன் ‘துப்பாக்கி’ படப்பிடிப்பில் இருந்த விஜயை தற்செயலாக சந்தித்தபோது தோன்றிய யோசனையின் விளைவாக,என் படத்தில் அக்ஷய் மற்றும் நாயகி ஷோனாக்ஷி ஷின்ஹாவுடன் ஒரு பாடலுக்கு ஆட விருப்பமா என்று கேட்க, ‘’ ஏனுங்ணா நீங்க கேட்டு நான் மறுக்க முடியுமா?’ என்று உடனே ஒத்துக்கொண்டாராம்.
மும்பையில் தொடர்ந்து நடந்து வந்த ‘துப்பாக்கி’ படப்பிடிப்புக்கு ஒரு நாள் ஓய்வு கொடுத்துவிட்டு,’ரவுடி ரத்தோரில்’ இன்று ஆடிக்கொண்டிருக்கிறார் விஜய்.