நகுலுடன் நடித்து வந்த ‘வல்லினம்’ சீனு ராமசாமியின் ‘நீர்ப்பறவை’ ஆகிய படங்களிலிருந்து தூக்கப்பட்ட காரணத்தால், நியூமராலஜி பார்த்து, பிந்து மாதவி என்ற பெயரை பிந்து சாகர் என்று மாற்றிக்கொண்டார் என்று வந்த செய்தியைப் படித்த போது கண்ணீர் விட்டு அழுதாராம் பிந்து.
இப்படி ஒரு சாதாரண செய்திக்கெல்லாம் அழுவார்களா என்றுதானே தோன்றும்? ஆனால் நடந்த உண்மை என்னவோ வேதனையானதுதான்.
’’’கழுகு’ ரிலீஸாகி அனைத்து தரப்பிலிருந்தும், எனக்கு பாராட்டுகள் குவிந்துகொண்டிருந்த நேரம். சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவதற்காக, மிகத்தீவிரமாகப் படித்துக்கொண்டிருந்த என் உயிர்ச்சகோதரன் சாகர்,உடல் நலக்குறைவால், யாரும் எதிர்பாராமல், திடீரென்று எங்களை விட்டுப்பிரிந்தான். அவனது பிரிவு எங்கள் குடும்பத்தையும், என்னையும் வாட்டி வதைத்தது. சரி,இனி அவன் தான் இல்லை. அவனது நினைவாவது என்னை விட்டு என்றும் நீங்காமல் இருக்கட்டுமே என்றுதான் அவனது பெயரையும் சேர்த்து, எனது பெயரை பிந்துசாகர் என்று மாற்றிக்கொண்டேன்.இதில் நியூமராலஜி எங்கிருந்து வந்த்து என்று சொல்லுங்கள் ?’’ பரிதாபமாய் கேட்கிறார் சாகரின் சகோதரி.
மேற்படி செய்தியை எழுதியவர்கள், வருந்தி மன்னிப்பு கோரவேண்டிய சோகம்தான் இது.