‘பணத்துக்காக எங்கள் திருமணத்தின் லைவ் நிகழ்ச்சியை விற்கவில்லை. விஜய் டி.வி. எங்கள் திருமணத்தை லைவ்வாக ஒளிபரப்ப ஒரு நல்ல தொகை தருவதாக சொன்னது. சரி என்று ஒப்புக்கொண்டோம்.ஆனால் சிலர் இதை வேண்டாவெறுப்பில் சர்ச்சையாக்குகிறார்கள்.’’
திருமணத்துக்கு ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் இப்படி புலம்பிக்கொண்டிருப்பவர் சாட்சாத் புது மாப்பிள்ளை பிரசன்னாதான்.
‘’ஒரு திருமணம் நேரடி நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்படுவது நம் கோடம்பாக்கத்துக்கு தான் புதுசே ஒழிய ஹாலிவுட்களில் இது சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. அப்படியிருக்க, இங்கே மட்டும் ஏன் பத்தாம்பசலித்தனமாக எல்லாவற்றையும் பார்க்கிறார்கள்?. அதுவும் இணையதளங்களில் நடமாடும் நாகரீகமற்ற கமெண்டுகள் அத்தனையும் சிநேகாவை குறிவைத்தே இருக்கின்றன’’ என்று கொதிக்கும் பிரசன்னா கல்யாண லைவ் ஒளிபரப்புக்கு சுமார் ஒரு கோடி விலை பேசியிருப்பதாக தகவல்.
சரி, பிரசன்னாவின் கொந்தளிப்புக்கு ஆளாகியிருக்கும் அந்த இணையதள கமெண்டுகள் என்ன என்று உங்களுக்கும் தெரிய வேண்டாமா/?
‘இன்னும் பெரிய விலை கொடுத்தா, விஜய் டி.வி.க்கு சிநேகாவும், பிரசன்னாவும் ‘சாந்தி முகூர்த்த லைவ் ரைட்ஸையும் விப்பாங்களா?
ஃபேஸ்புக்கில், ட்விட்டர் இணையதளங்களில், இன்றைக்கு நித்தியானந்தா, ரஞ்சிதானந்தா,மதுரை ஆதீனங்களுக்கு அடுத்தபடியாக ‘ஹாட்’ டாபிக் இதுதான்.