’’ஒரு படம் முடிந்து அடுத்த படத்துக்கு போவதற்குமுன், சுமார் ஒரு டஜன் கதைகளையும், 5 டஜன் தலைப்புகளையும், பத்திரிகையாளர்கள் தந்துகொண்டே இருப்பார்கள்’’ என்று நக்கலடிக்கிறார் இயக்குனர் ஷங்கர்.
’’எனது படம் ரிலீஸான பிறகு, கொஞ்ச நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு, பின்னர் உதவியாளர்களுடன் கதை விவாத்த்தில் ஈடுபட ஆரம்பிப்பேன். இந்த சமயத்தில், பத்திரிகைகளில் செய்திகளை முந்தித்தருகிறோம் என்ற
எண்ணத்தில்,ஆளாளுக்கு ஒன்று எழுத ஆரம்பிப்பார்கள்.
நண்பன் ரிலீஸுக்குப்பிறகு, ரஜினி, கமலில் துவங்கி சூர்யா வரை பத்து ஹீரோக்களுடனும் இணைத்து செய்திகளும் சப்ஜெக்டும் வந்துவிட்டன.
கடைசி கட்ட நிலவரப்படி,எனது ஹீரோவாக விக்ரம் இருக்கிறார். படத்தின் பெயர் ‘தேர்தல்’. முதல்வனுக்குப்பிறகு மறுபடியும் முழுக்க முழுக்க ஒரு அரசியல் படம் எடுக்கிறேனாம். தமிழகத்தில் நடக்கும் ஒரு இடைத்தேர்தலை மய்யமாக வைத்து இந்தக்கதை இருக்குமாம்.
இப்படி இன்னும் எவ்வளவு செய்திகள் காத்திருக்கின்றனவோ தெரியவில்லை.இந்த நிமிஷம் வரை எனது அடுத்த படத்துக்கு, கதையோ, டைட்டிலோ, ஹீரோவோ எதுவும் முடிவாகவில்லை. அதனால் எனது அடுத்த கதை குறித்து கதை விடுவதை கொஞ்சம் நிறுத்துறீங்களா ப்ளீஸ்…-என்று ஸ்கூப் நியூஸர்களை நோக்கி கையெடுத்து கும்பிடுகிறார் ஷங்கர்.
லேட்டஸ்டா நீங்க விக்ரமுக்கு பதில் சத்யனை கமிட் பண்ணப்போறதாவும், படத்துக்கு ‘பசப்புகள்’னு பேர் வச்சிருக்கதாவும் ஒரு ஸ்கூப் நியூஸ் கேள்விப்பட்டமே உணமையா சார்?