எந்த ஹீரோவுடன் சேர்ந்து நடித்தாலும் கிசுகிசு எழுதத்தான் செய்வார்கள். அதற்காக ஒரு பெரிய பேனரின் படத்தை, ஒரு நல்ல கதையை மிஸ் பண்ண முடியுமா?’’இப்படி ஒரு பில்டப்போடு ஆரம்பிப்பது வேறு யாருமல்ல நம்ம ‘கருவாச்சி’ பூர்ணாதான்.
’முப்பொழுதும் உன் கற்பனைகள்’ படத்தின் பாதியில் வெளியேற்றப்பட்ட,கணேஷ் விநாயக், அருள்நிதியை வைத்து அடுத்து இயக்கும் படத்தில் இணைகிறார் ‘’கருவாச்சி’ படத்தில் புது ஹீரோவோடு ஜோடிபோட்டு கிசுகிசுக்கப்பட்ட பூர்ணா,.
‘மலையாளத்தில், விரைவில், நான் நடித்து வெளிவர இருக்கும் ‘சட்டைக்காரி’ ரீமேக்கின் ரிலீஸை எதிர்பார்த்து நகம் கடித்துக்கொண்டிருந்த வேளையில், அருள்நிதி கடந்த வாரம் போனில் அழைத்தார்.’அந்தப் படத்தில் நடிக்க அருள்நிதிதான் என்னை சிபாரிசு செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.. இயக்குனர் கணேஷிடம் இரு தினங்கள் முன்புதான் கதை கேட்டேன். ஹீரோவுக்கு இணையான பாத்திரத்தில் அவரது நண்பர்கள் கேரக்டர் மூன்று இருந்தும் அந்தக்கதையை அருள்நிதி தேர்ந்தெடுத்திருப்பது அவரது முதிர்ச்சியைக்காட்டுகிறது. எனக்கும் அந்தக்கதையில் நல்ல முக்கியத்துவம் இருக்கிறது. எனவே சம்பளம் குறித்து எந்தவித பேச்சுவார்த்தை நடக்காத சூழலிலும் உடனே ஓகே சொன்னேன்.’நீண்ட நாள் கிடப்பில் இருந்த ஜெய்யுடன் நான் ஜோடி சேர்ந்த ‘அர்ஜுனன் காதலி’ ஒரு வழியாக முடிந்துவிட்டது. எனக்கும் ஜெய்யுக்கும் இடையில் ஜோடிப்பொருத்தம் சூப்பராக இருந்ததாக எல்லோரும் சொன்னார்கள். இப்போ அருள்நிதி படமும் வந்திருக்கதால உங்களுக்கெல்லாம் கிசுகிசு எழுத ரொம்ப வசதியா இருக்கும்’’
என்றபடி, ’எப்ப சார் எழுதப்போறீங்க’? என்பது மாதிரியே முட்டைக்கண்களால் கொட்டக்கொட்ட பார்க்கிறார் ‘சட்டைக்காரி’ பூர்ணா.