சுமாராக ஓடும் படங்களை, சூப்பர் ஹிட் படங்களாக்கிக் காட்டுவதுதான் கோடம்பாக்கத்து ஆசாமிகளின் லேட்டஸ்ட் வியாதி. அதிலும் சுந்தர்.சி.யின் ‘மசாலா கஃபே’ ஊழியர்கள் அடிக்கிற லூட்டி தாங்கமுடியவில்லை.
படத்தை வாங்கி ’குனிந்த’ நிறுவனத்தைச்சேர்ந்த ஒருவர் ட்விட்டரில் குஷ்புவுக்கு,’ மேடம் மதுரை, திருச்சி ஆல் செண்டர்ஸ் ஆல் ஷோவ்ஸ் ஹவுஸ் ஃபுல்லு’’ என்கிறார். உடனே அதே ட்விட்டரில் குஷ்பூ கொஞ்சமும் சளைக்காமல்,’’ சென்னையில எல்லா தியேட்டருக்கும் போயிட்டு வந்துட்டேன். புரடியூசர் எனக்கே டிக்கட் கிடைக்கலை’’ என்கிறார். ஹைய்யோ… ஹைய்யோ..
இதுபோக, இந்த மசாலா கஃபே’ காவியத்தை தமிழில் பார்ட்-2 வாகவும், முதல் பாகத்தை இந்தி, மராட்டி, கொங்கனி,ஆங்கில மற்றும் லத்தீன் அமெரிக்க மொழிகளிலும் ரீ-மேக்கப்போகிறார்களாம்.
இதற்கான வேலைகளில் சுந்தரின் உதவியாளர்கள் டீம் ஈடுபட்டுக்கொண்டிருக்க, சுந்தரோ, தான் விஷாலை வைத்து அடுத்து இயக்கப்போகும்,’எம்.ஜி.ஆர்’ பட வேலைகளில் மும்முரமாகிவிட்டார்.
விஷால் மூன்று வேடங்களில் நடிக்கவிருக்கும் இப்படத்துக்கு அட்வான்ஸ் வாங்கியிருந்த ராதாவின் மகள் கார்த்திகா, படத்தின் கதையை சொல்வதை தொடர்ந்து சுந்தர்.சி. தள்ளிப்போட்டுவந்ததாலும், மசாலாவில் அஞ்சலி, ஓவியாவை உரித்த்துபோல் தன்னையும் உரிப்பார்கள் என்றும் பயந்து, தான் நடிக்க விரும்பவில்லை என்று கூறி வெளியேறிவிட்டாராம்.