’3’ படம் ரிலீஸாகி மூனு மாதங்கள் ஆகப்போகிற நிலைமையிலும், தன்னையும் தனுஷையும் பற்றிய கிஸ்ஸுகிஸ்ஸுக்கள் ஓயாத நிலையில், ஒரேயடியாக மும்பையில் செட்டிலாகும் முடிவை எடுத்துவிட்டார் ஸ்ருதிஹாசன்.
இதை ஒட்டி மும்பையின் பாந்த்ரா பகுதியில், தான் மட்டும் தனியே வசிப்பதற்கென, நல்ல வசதியான அபார்ட்மெண்ட் தேடி வருகிறார் ஸ்ருதி.
‘பாந்த்ரா ஏரியாவில் வீடு தேடுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. முதலாவது என் அம்மாவும் ,தங்கை அக்ஷராவும் அங்கேதான் இருக்கிறார்கள். இரண்டாவது நான் படித்த செய்ண்ட் ஆண்ட்ரூயிஸ் கல்லூரி அங்கேதான் இருக்கிறது. மூன்றாவது அது கடலை ஒட்டிய இடமாதலால் எப்போதும் அருமையான காற்றோட்டம் இருந்துகொண்டே இருக்கும்’’
என்று அடுக்கிக்கொண்டே போகும் ஸ்ருதி, தான் இந்தியில் நடித்த முதல்படம் சரியாகப்போகாவிட்டாலும், தொடர்ந்து நிறைய ஆஃபர்கள் வருவதாகவும், மும்பையில் செட்டிலான பிறகே எந்தப்படத்தில் நடிப்பது என்று முடிவெடுக்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.
‘ஸ்ருதி மும்பைக்கு ஷிஃப்ட் ஆவது குறித்து அப்பாவுக்கு சொல்லிவிட்டாரா?’’
‘நான் எடுக்கிற எந்த முடிவுகள் குறித்தும் எப்போதுமே அப்பாவிடம் கருத்து கேட்பதும் இல்லை. அவரும் எதுவும் சொல்வதும் இல்லை’’
ஸ்ருதியின் குரலில் இருக்கிற உறுதியைப் பார்த்தால், தமிழ்சினிமா பக்கம் கொஞ்ச காலத்துக்கு எட்டிப்பார்க்க மாட்டார் என்றே நமது ஏழாம் அறிவுக்கு தோணுகிறது.