சுமார் 5 வருடங்களாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ‘ரெஸ்ட்’ விட்டிருந்த எஸ்.ஜே.சூர்யா, மீண்டும் இயக்குனர் கம் ஹீரோ அவதாரத்தோடு களம் இறங்கிவிட்டார். படத்தின் பெயர் ‘இசை’. [ம்?] இந்த முறை நமது ரிஸ்க்கை இன்னும் சற்று அதிகரிக்கும் விதமாக படத்தின் இசையமைப்பாளர் அவதாரத்தையும் அவரே ஏற்றுக்கொண்டு இருக்கிறார்.
‘என்ன நடந்தது, எப்படி நடந்தது என்று யோசித்துப்பார்க்கக்கூட முடியாத நிலையில் ஒரு பெரிய கேப் விழுந்துவிட்டது. சரி இதுவும் நல்லதுக்குத்தான் என்று நினைத்துக்கொண்டு ‘இசை’ படத்தின் வேலைகளில் இறங்கிவிட்டேன். இன்னும் இரு தினங்களில் ஷூட்டிங் கிளம்புகிறேன்.
படத்துக்கு நானே இசையமைக்கிறேன் எனும்போது, இவனுக்கு ஏண்டா இந்த வேண்டா வேலை என்று உங்களுக்கு தோணும். ஆனால் நான், இசையமைக்கும் வேலையை விளையாட்டாய் எடுத்துக்கொண்டு செய்யவில்லை. இளம் வயதிலிருந்தே எனக்கு இசை மீது தீராத ஒரு ஆசை உண்டு. இப்போது கூட முறைப்படி சங்கீதம் கற்றுக்கொண்டுதான் இசையமைக்கவே துணிந்திருக்கிறேன். சிலரைப்போல் சும்மா டேபிளில் தாளம் போட்டு குரங்காட்டி வித்தை காட்டும் இசையமைப்பாளனல்ல நான்’’
என்கிற சூர்யா, சில தினங்களுக்கு முன்பு சில தினங்களுக்கு முன்பு ‘இசையமைப்பது தொடர்பாக ஏ.ஆர். ரகுமானை சந்தித்து ஆசி பெற்று வந்தாராம்.
அப்போது தன்னைப்போலவே போஸ் கொடுத்து எஸ்.ஜே.சூர்யா படத்துக்காக எடுத்துக்கொண்ட ஸ்டில்களைப் பார்த்து அதிர்ந்து போன ரகுமான் ‘ஸ்டில்லோட நிறுத்திக்கங்க. தப்பித்தவறி என் கதைய எடுத்துறப்போறிங்க ?’ என்று சற்றே எச்சரித்து அனுப்பி வைத்தாராம்.