வசந்த்தின் ‘மூன்று பேர் மூன்று காதல்’ படத்தில் ஒரு கவுரவ வேடத்தில் நடித்ததைத்தாண்டி பல மாதங்களாக வேலவெட்டி மற்றும் வெட்டிவேலை எதுவுமின்றி சும்மாவே சுத்திக்கொண்டிருக்கும் சேரன், இனி கொஞ்ச காலத்துக்கு நடிப்பதில்லை, ஒன்லி டைரக்ஷன் தான் என்ற சங்கடமான முடிவுக்கு சமீபத்தில்தான் வந்தாராம்.
இந்த தகவலை வெளியே விட்டால், தயாரிப்பாளர்கள் கியூ கட்டி நிற்பார்கள் என்று நினைத்து தனது உதவியாளர்கள் மூலம் செய்தியை கசிய விட்டுப்பார்த்தும் எந்தவித பிரயோசனமும் இல்லை.இந்த முடிவை கொஞ்சம் முந்தியே எடுத்திருந்தா பொக்கிஷமான முடிவுன்னு சொல்லியிருக்கலாம். ஆனாலும் ஒண்ணும் மோசம் போயிடலை. ஒட்டுமொத்த தமிழ்சினிமா ரசிகர்கள் சார்பா அவருக்கு நன்றி சொல்லிருங்கப்பா என்பதைத்தாண்டி சேரனுக்கு எதுவும் நடக்கவில்லை.
அடுத்த கட்டமாக கம்மி பட்ஜெட்டில்,’ ஜே.கே. என்றொரு நண்பன்’ என்ற பெயரில் ஒரு கதையை தயார் செய்தார்.முற்றிலும் புதுமுகங்கள்.’வழக்கு எண்’ பாலாஜி சக்திவேலை ஓவர்டேக் பண்ணிக்காட்டுறேன்’ என்று தனது உதவியாளர்களிடம் முழங்கினார்.இந்த தகவலையும் வெளியே கசியவிட்டும் பிரயோசனமில்லை.
சரி இனி வெக்கப்பட்டா வேலைக்காகாது என்று முடிவு செய்து ஒன்றிரண்டு தயாரிப்பாளர்களைத்தேடியும் போனார்.
‘’இப்பக்காட்டுற பம்மலும், பணிவும் ஷூட்டிங் ஆரம்பிச்ச பிறகு உங்கிட்ட பாக்கமுடியலையே சேரா’ என்றபடி அந்தக்கதையும் பல இடங்களில் நிராகரிக்கப்பட, அடுத்தகட்டமாக சில பணக்கார வீட்டுப்பிள்ளைகளை அறிமுகம் செய்து அவர்கள் காசில் குளிர்காயமுடியுமா என்பதற்காக, செய்தித்தாள்களில் ‘புதுமுகம் தேவை’ விளம்பரம் தரலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறாராம்.