நல்லபடம் என்பதால் நல்லபடியாக விமர்சனம் எழுதுகிறார்கள் அதற்காக பத்திரிகையாளர்கள் காலில் விழுந்தெல்லாம் பாலாஜி சக்திவேல் நமஷ்கரிக்க வேண்டுமா ? – இதுதான் கோடம்பாக்கத்தின் ஹாட்டஸ்ட் டாபிக் என்ற போதிலும், இதுபற்றியெல்லாம் எந்தவித அக்கறையும்கொள்ளாமல், ‘வழக்கு எண்’ ஏற்படுத்திவரும் சலனங்களை அறிந்துகொள்வதிலேயே முழு அக்கறையையும் செலுத்தி வருகிறது பாலாஜி சக்திவேல் அண்ட் திருப்பதி பிரதர்ஸ் குழு.
படம் ரிலீஸான முதல் இருதினங்களில், வசூல் நிலவரம் கொஞ்சம் டல்லாக இருந்து,
ஆஹா ஓஹோவென விமர்சனங்கள் வந்தவுடன், ஆல் செண்டர்ஹிட் ஆனபடியால், பட்த்தின் ரீ-மேக் ரைட்ஸுக்கு பெரும் போட்டி நிலவ ஆரம்பித்துவிட்டதாம்.
இதை ஒட்டி, மும்பையில் முக்கிய சினிமா பிரபலங்களுக்கு, நடிகர் மாதவனை வைத்து, ஒரு பிரிமியர் ஷோ போட தீவிர ஏற்பாடு செய்து வரும் லிங்குசாமி, படத்தை இந்தியிலும் பாலாஜி சக்திவேல் தான் இயக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.
‘’ படம் ரிலீஸான மறுநாளிலிருந்தே இந்தியில் ரீமேக்க ஆசைப்பட்டு ஏகப்பட்ட பேர் என்னைத்தொடர்பு கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். எனக்கும் என் நிறுவனத்துக்கும் நல்ல கவுரவத்தை சம்பாதித்துக்கொடுத்திருக்கும் படம் இது. இதன்முழுப்பெருமைக்கும் சொந்தக்காரர் என் நண்பர் பாலாஜி சக்திவேல்தான். இந்த சென்சிடிவான கதையை இந்தியிலும் அவரே இயக்கினால்தான் சரியாக வரும் என்று எனக்குத்தோணுகிறது. எனவே யார் எவ்வளவு பெரிய விலைக்கு கேட்டாலும், பாலாஜி இயக்குனர் என்றால்தான் சம்பந்தப்பட்டவர்களுக்கே விற்போம்.அல்லது அவசியம்ஏற்பட்டால் எங்களது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமே கூட இதை இந்தியில் தயாரிக்கும்’’ தெம்பாக சொல்கிறார் லிங்குசாமி.