hansika-1

கேஸ் அடுப்பு, தோசை சட்டிகளின் தயவு எதுவுமின்றி அவரது கன்னத்திலேயே ரெண்டு ஆஃப் பாயில் போட்டு சாப்பிட்டுவிடலாம் என்கிற அளவுக்கு சூடாக இருந்தார் ஹன்ஷிகா மோத்துவாணி.

‘அதை எழுதினவன் கதி என்ன ஆகப்போகுதுன்னு பாருங்க’..

என்ற பீடிகையுடன் ஹன்ஷிகா சொன்ன சங்கதி என்னவோ சாதாரணமானதுதான்.

சூர்யா-ஹரி கூட்டணியுடன் ‘சிங்கம்-2’ படத்தில் ஒப்பந்தமாகியிருப்பதால், நடுவே ரகஸியமாக அமெரிக்கா சென்று தன் எடையில் ஏழெட்டு கிலோவைக் குறைக்க ஹன்ஷிகா திட்டமிட்டிருப்பதாக வந்த செய்தியைத்தான் திட்டித்தீர்க்கிறார் மொத்துவாணி.

‘’நானே ஒரு நாள் ஓய்வுகூட எடுக்கமுடியாத அளவுக்கு வரிசையாக ‘வேட்டைமன்னன்’ சேட்டை’ சிங்கம்-2’ வாலு’ என்று படு பிஸியாக இருக்கிறேன். இதில் ரகசியமாக எங்கே அமெரிக்காவுக்கு ஆட்டுக்குட்டி விக்கப் போவதாம்? கப்ஸா விடுவதற்கு ஒரு அளவே இல்லையா /?.அதுவும் போக நான் இப்படி புஷ்டியாக ப்ப்ளிமாஸ் போல் இருப்பதை நம்ம மாஸ் விரும்புகிறார்கள் என்கிற அடிப்படை அறிவு கூட இல்லதவளா நான். எனவே எந்தக்காரணம் கொண்டும் எடைக்குறைப்பு என்ற பேச்சுக்கு இடமே இல்லை’’ என்று புஷ்டியை ஸாரி முஷ்டியை உயர்த்துகிறார் ஹன்ஷிகா.

வர்ற ஆடிபோய் ஆவணி வந்தால்தான் தனக்கு 21 வயதே ஆகிறது என்கிற தகவலையும் இத்தோடு தெரிவிக்கும் ஹன்ஷிகா,’’ நான் ரொம்ப சின்னப்பொண்ணுப்பா, இனிமே என் மனசு புண்படுற மாதிரி,கண்டபடி எழுதாதீங்கப்பா ப்ளீஸ்’’ என்கிறார் ஒரு ஃபேமிலி பேக் ஐஸ்க்ரீமை தனி ஆளாய் சாப்பிட்டபடியே.

hansika-2 hansika-2 hansika-3 hansika-4

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.