raja-needhane-en-1

ராஜா ரசிகர்களுக்கு அவரது பாடலுக்கு இணையான இனிமையான செய்தி ஒன்று.

கவுதம் மேனன், ராஜா கூட்டணியில் தயாராகி வரும்,’ நீ தானே என் பொன் வசந்தம்’ பட்த்தின் அனைத்து பாடல்களும் ரெகார்டிங் முடிந்துவிட்ட நிலையில், பல முக்கிய ஆடியோ நிறுவனங்கள் நீ.எ.பொ’வின் ரைட்ஸை வாங்க

முட்டி மோதுகின்றனவாம்.

இத, இதத்தான் எதிர்பார்த்தேன் என்று மனசுக்குள் நினைத்துக்கொண்ட கவுதம், படு விவரமாக, ஏறத்தாழ டெண்டர் விடாத குறையாக, ஆடியோ ரைட்ஸ் கேட்டு வருபவர்களிடமே விலையை சொல்லச்சொல்ல, ஒரு கோடியில் துவங்கிய போட்டி, லேட்டஸ்டாக 2.25 கோடியில் வந்து நிற்கிறதாம்.

இந்தத்தொகையானது கவுதம்- ஏ.ஆர். ரகுமான் கூட்டணி கைகோர்த்த ‘விண்ணைத்தாண்டி வருவாயாவை தாண்டிய வருவாய் என்பது குறிப்பிட்டு சொல்லத்தக்கது.

இன்னும் ஒரு சில மணி நேரங்களில் இதன் விற்பனை மேற்படி தொகையை ஒட்டி ஒரு விலையில் முடிந்து விட இருக்கும் சூழலில்,’ நீ.என்.பொன்’ஆடியோ வெளியீட்டு விழாவை, தமிழ்சினிமா இதுவரை கண்டிராத அளவுக்கு பிரமாதமாக கொண்டாட கவுதம் முடிவு செய்திருக்கிறாராம்.

இந்த நேரத்தில் ராஜா ரசிகர்கள் உற்சாகமாக, ஏ.ஆர். ரகுமான் ரசிகர்கள் காதில் விழும்படியாக பாடவேண்டிய பாட்டு,’ நேற்று இல்லை ..நாளை இல்லை.. எப்பவும் நான் ராஜா…
needhane-en-pon-2

needhane-en-pon3

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.