இந்த வருட இறுதியில் மேற்படி பாடலை மிகவும் சோகமாக பாடவேண்டிய சூழ்நிலைக்கு நமது தமிழக மீனவர்கள் ஆளாவதற்கான அறிகுறிகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.
காரணம் ஒன்றல்ல இரண்டல்ல, ஒரே நேரத்தில் மீனவர்களைப்பற்றிய 4 படங்கள் தயாராகிவருகின்றன.
முதலாமவர் மணிரத்னம். படத்தின் தலைப்பிலேயே ‘கடல்’ இருக்கிறது.
அடுத்த படம், தென்மேற்கு பருவக்காற்று’ இயக்கிய சீனுராமசாமியின் ‘நீர்ப்பறவை’
மூன்றாவது பரத்பாலா இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘மரியான்’
நான்காவது படம் விக்ரம் மீனவனாக நடிக்கவிருக்கும்,’டேவிட்’. இப்படம் இந்தி மற்றும் தமிழில் உருவாகிறது.
இதில் விக்ரமின் டேவிட் தவிர, மற்ற அத்தனை படங்களின் படப்பிடிப்புமே, நாகர்கோவிலிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் பரப்பளவுக்குள் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.
மீனவ சமூகத்தின் மீது அக்கறை கொண்டு இப்படி மொத்தமாக கிளம்பியிருக்கும் ‘அந்த நாலு பேருக்கு நன்றி’ என்றுதானே பாடவேண்டும்? பிறகெதுக்கு சோகப்பாட்டு என்றுதானே உங்களுக்கு தோன்றும்.
ஆனால் நமக்கென்னவோ, ஏதோ ஒரு திரைப்படவிழாவில் வந்த ஒரு வெளிநாட்டுப்படத்தின் ஒரே’மீனவக்கதை’ டி.வி.டியை, போட்டிபோட்டுக்கொண்டு, நான்கு விதமாக சுட்டுக்கொண்டிருக்கிறார்களோ என்று சந்தேகப்படாமல் இருக்க முடியவில்லை.