படம் ரிலீஸானதும் அவசர அவசரமாக, காலையில் ஹைதராபாத்திலும் ,மாலையில் சென்னையிலுமாக பிரஸ் மீட் வைத்து, மூன்றே நாட்களில் 45 கோடி வசூல், இதுவரை வந்த அத்தனை தமிழ்சினிமாக்களையும் தாண்டிய வெற்றி’ என்று அறிவித்துவிட்டு, பத்திரிகையாளர்களை ஒரு கேள்வி கூட கேட்கவிடாமல் பதறி அடித்து ஓடிவிட்டது சகுனி’ கோஷ்டி.
இதே வகையான கூத்தைதான் சூர்யாவின் ‘ஏழாம் அறிவு’ ரிலீஸானபோதும் கையாண்டார்கள்.
பாவம் ரஜினியும் ,கமலும்., ரிடையராகப்போகிறவர்கள். அவர்கள் மனம் புண்படவேண்டாமே என்று தமிழ்சினிமாவில் வசூல் சாதனை படைத்த படங்கள் என்று தசாவதாரம், எந்திரன், ஏழாம் அறிவு’ ஆகியவற்றை அறிவித்தார்கள்.
இப்போது’சகுனி’ அந்த மூன்று படங்களையும் முதல் மூன்றே நாட்களில் முட்டித்தள்ளியுள்ள நிலையில், சந்தோஷத்தின் உச்சியில் மிதக்கவேண்டிய பட இயக்குனர் சோகத்தில் நொந்துபோய் இருக்கிறாராம்.
காரணம் தியேட்டர்களிலிருந்து அவருக்கு வரக்கூடிய உண்மையான நிலவரங்கள்.
திங்கள், செவ்வாயிலேயே ‘சகுனி’ பல தியேட்டர்களில் குனிய ஆரம்பித்திருந்த நிலையில், படத்தின் இரண்டாம் பாதியைப்பற்றி ரசிகர்கள் மத்தியில் மிக மட்டமான கமெண்டுகளாம்.
‘’நான் சொன்ன கதையே வேற. ஒரு கட்டத்துக்கு மேல, அதுல உள்ள புகுந்து கார்த்தியும் ஞானவேல் ராஜாவும் கபடி விளையாட ஆரம்பிச்சாங்க. எனக்கு முதல் படம்ங்கிறதுனால என்னால எதுவும் பேசமுடியலை.
முதல்பாதியாவது பரவாயில்லை. இரண்டாவது பாதியில நான் சொன்ன இண்ட்ரஸ்டிங்கான அத்தனை சீனையும் தூக்கிட்டு, ஏனோதானோன்னு எதையெதையோ சீனா வச்சாங்க. இப்ப என்ன ஆச்சி?’’
இப்படி தனது நண்பர்களிடம் சங்கடமாக புலம்பி வரும் சங்கர் தயாள், கார்த்தி அண்ட் ஞானவேல் கோஷ்டிகளைப்பார்த்து ஒரே ஒரு கேள்வி கேட்க விருபுகிறாராம்.
‘’மூனே நாள்ல 45 கோடி வசூல் பண்ண ‘சகுனி’ பட டைரக்டரான எனக்கு அடுத்த படம் தர நீங்க தயாரா?’
‘சகுனி சார்ஸ் எங்க ஓடுறீங்க. நின்னு பதில் சொல்லிட்டுப்போங்க.