’பிருந்தாவனம்லோ நந்தகுமாரடு’ என்று தெளிவாய் புரிகிறமாதிரி தெலுங்கிலும்,’இரண்டாம் உலகம்’ என்று வழக்கம்போல் குழப்பமாய் தமிழிலும் பெயர் வைத்திருக்கும் செல்வராகவன், பல கட்டங்கள் முடிந்து ஒருவழியாய் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு வந்துவிட்டராம்.
இறுதிச்கட்டப் படப்பிடிப்பு என்றவுடன் ஏதோ ஒருவாரம் பத்துநாள் என்று நினைத்துவிடாதீர்கள். 65 நாட்கள். ஐரோப்பிய நாடுகளின் பல்வேறு லொகேஷன்களில் நடைபெறப்போகும் இந்தப் படப்பிடிப்புக்காக , ஜார்ஜியாவில் இறங்கி மொத்த யூனிட்டும் கிரிக்கெட் விளையாடிக் காத்திருந்த நிலையில், நேற்று ஆர்யாவும் அனுஷ்காவும் லொகேஷனில் தறையிறங்கிவிட்டார்களாம்.
‘’ ஆரம்பத்தில் ‘இரண்டாம் உலகம்’ கதையை எனது நண்பர்கள் மற்றும் சில டெக்னீஷியன்களிடம் சொன்னபோது, இதை படமாக எடுப்பது கஷ்டம். பேசாமல் அனிமேஷன் படமாக எடுத்துவிடுங்கள் என்று பயமுறுத்தினார்கள். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் துணிந்து இறங்கி இதோ மனதுக்கு பிடித்தவகையில் ‘படமாகவே’ எடுத்துவருகிறேன்.
என்னைப்பொருத்தவரையில், நாம் மனதில் வரித்து வைத்திருக்கிற காட்சியை, அது எவ்வளவு சவாலானதாக இருந்தாலும், இதயபூர்வமாக கையாண்டால் எதையும் படமாக கொண்டுவந்துவிடமுடியும்’’
என்று வழக்கம்போல் புரிந்தும் புரியாத வகையில் சொல்லும் செல்வாவுக்கு, ஜார்ஜியா அரசாங்கம், தங்கள் நாட்டின் ரிஸ்க்கான லொகேஷன்களை சுற்றிப்பார்ப்பதற்காக ஒரு ஸ்பெஷல் ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து தந்த்தாம். சொல்லிச்சொல்லி மாய்ந்து போகிறார்.
மொழி தெரியாதவங்க உங்க டி.வி.டி. பார்த்தா,சுத்திப்பாக்க என்ன, கிஃப்டாவே கூட ஹெலிகாப்டர் குடுப்பாங்க செல்வா. சிக்கல்ல சிக்கித்தவிக்கிறது தமிழங்க மட்டும்தான?