காரணம் என்ன தலைப்பு வச்சாலும் நீங்க வெறுப்பாயிடுவீங்க.விசயம் பழையபடியும் அதேதான்.யெஸ் பில்லா2’ ஜூலை 13 லருந்து மறுபடியும் ஒரு வாரமோ ரெண்டு வாரமோ தள்ளிப்போகுது.
வரவர இணையதளங்கள்ல, இப்பல்லாம் படங்கள்ல தல நடிகிறதில்லை ஒன்லி நடக்கிறார் என்று ஓட்ட ஆரம்பித்ததாலோ என்னவோ, தலயின் பட்ட காலிலேயே படுவதுபோல், பில்லா2’ மீண்டும் மீண்டும் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது.
இம்முறை படத்தை தள்ளிப்போடசொல்பவர்கள், நமக்கு கொஞ்சம் தள்ளி இருக்கிற ஆந்திரவாலாக்கள். மேட்டரு ஏமண்ட்டி?
தமிழிலும் ரிலீஸாகும், அதே தேதியில்,ஆந்திராவில் வரும் ஜூலை 6ம் தேதியன்று இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் ‘நான் ஈ’ படம் ரிலீஸாகிறது. ராஜமவுலி தெலுங்கில் தொடர்ந்து ஐந்து மெகா ஹிட்டுகள் தந்த இயக்குனர் என்பதால் முன்னணி ஹீரோக்கள் யாரும் இல்லாத நிலையிலும், நான் ஈ’ ஈடு இணையற்ற விலைக்குப்போயிருக்கிறது. எனவே பெரிய விலைக்கு வாங்கி அந்தப்படத்தை வாங்கி ரிலீஸ் பண்ணும் விநியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும், குறைந்த பட்சம் இரண்டு வார இடைவெளிகளாவது எதிர்பார்க்கிறார்கள்.
சரி, தமிழில் ஜூலை 13 ரிலீஸ் செய்துவிட்டு ஒரு வாரம் தள்ளி தெலுங்கில் ரிலீஸ் செய்தால்..? படம் ஹிட்டானால் ஓ.கே. இல்லையெனில், மொத்தப்பணத்தையும் தெலுங்கு வாங்கிய பார்ட்டிகளுக்கு செட்டில் பண்ண வேண்டி வரும். அந்த ரிஸ்க்கை எடுக்க இப்போதெல்லாம் யாரும் துணிவதில்லை.
எனவே மிஸ்டர் பில்லா டேவிட்டு ஜூலை 13 வர்றதும் டவுட்டு.