தன் படத்தில் கதையையும் நடிகர்களையும் விட கே.வி.ஆனந்த் அதிகம் நம்புவது வித்தியாசமான லொக்கேஷன்களைத்தான். இதுவரை நல்லபடியாகவே போய்க்கொண்டிருந்த ‘மாற்றான்’ படப்பிடிப்பில், ஒரு லொக்கேஷன் பஞ்சாயத்தால், கே.வி.ஆனந்துக்கும் சூர்யாவுக்கும் இடையில் பெரும் முட்டல் நிகழ்ந்துள்ளது. இதை அடுத்து இருவருமே ஒருவரிடம் ஒருவர் சொல்லாமல் ஊர் திரும்பிவிட்டனர்.
ஆகஸ்ட் 15 அன்று திரைக்கு வருவதாக இருக்கும் ‘மாற்றானின்’ 90 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில், அதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு குரோஷியா,செர்பியா, அல்பேனியா மற்றும் மெஸடோனியா [என்னங்க மெடிக்கல் ஷாப் மாத்திரை பேரா இருக்கு?] போன்ற குட்டி நாடுகளில் நடந்தது.
இதன் தொடர்ச்சியாக படத்தின் இரண்டாம் பகுதியில், க்ளைமாக்ஸுக்கு சற்று முன்னதாக இடம் பெறும் பாடல் ஒன்றை, இதுவரை யாரும் நுழைந்திராத லொக்கேஷனில் எடுக்கவேண்டும் என்று ஆனந்தும், அவரது ஒளிப்பதிவாளர் சவுந்தரும் யோசனை செய்து, மடகாஸ்கர் காட்டுப்பகுதிதான் அதற்கு சரியான இடம் என்று முடிவு செய்கின்றனர்.
‘’ உலக சினிமாவுல இதுவரைக்கும் யாரும் போகாத லொக்கேஷன் சூர்யா.பின்னி எடுத்துரலாம்’ என்று கே.வி. ஆனந்த் அந்த அடர்ந்த காட்டைப்பற்றி சொல்லச்சொல்ல சூர்யாவின் மனத்திரைக்குள், ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் கறி எடுக்கும் ஒரிஜினல் சிங்கங்கள் நடமாட ஆரம்பித்தன. ஆனால் அவருடன் டூயட் பாடவேண்டிய காஜல் அகர்வாலோ, ஹார்லிக்ஸ் குடித்த குழந்தை சொல்வதுபோல’ சிங்கம் போல ஸ்ட்ரெங்த் எனக்கு’ என்றபடி காட்டுக்குள் துணிந்துபோகத்தயாராய் இருந்தார்
.
அப்போதைக்கு மறுப்பு ஏதும் சொல்லாத சூர்யா மறுநாள் அவரிடம் தகவலைக்கூட சொல்லாமல் சென்னைக்கு ஃப்ளைட் ஏறிவிட்டார். வேறுவழியின்றி அதற்கு மறுநாள் யூனிட்டுடன் சென்னை திரும்பிய ஆனந்த், அந்தப்பாட்டை பிரம்மாண்ட செட்கள் அமைத்து படமாக்கிவிடலாமா அல்லது சூர்யா பயப்படாத முயல், சுண்டெலிகள் மட்டுமே நடமாடும் காட்டுப்பகுதிக்குள் எடுத்துவிடலாமா என்று யோசித்துவருகிறாராம்.