இயக்குனர் கவுதவ வாசுதேவ மேனன் தயாரிப்பில் ‘விற்றது தமிழ்’ பட இயக்குனர் ராம் கடந்த 2011 ஜனவரியில் துவங்கிய படம் ‘தங்க மீன்கள்’. படம் துவங்கி பத்தொன்பது மாதங்கள் ஆன நிலையிலும் ரிலீஸாகிற அறிகுறியைக்காணோம்.
இயக்குனர் ராமே கதையின் நாயகனாக நடிக்க, பத்மப்ரியா ஒரு குட்டி கேரக்டரில், கடைசி நேரத்தில் ஒட்டிக்கொள்ள படத்தின் மற்ற பாத்திரங்கள் எல்லாம் ஏறத்தாழ புதுமுகங்களே.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ஏழெட்டு மாதங்களுக்கு மேலாகியும் ,போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் நடக்காமல் இருக்கின்றன.
இதற்குப் பின்னர் பல மாதங்கள் தாமதமாக துவங்கப்பட்ட கவுதமின் ‘நீதானே என் பொன் வசந்தத்துக்கு ஆடியோ ரிலீஸ் தேதி சொல்கிறார்கள்.ரிலீஸ் தேதி சொல்கிறார்கள். அப்புறம் ஏன் தங்க மீன்களை மட்டும் ஓவராக தங்க வைத்து டைரக்டர் ராமை பொங்க வைக்கிறார்கள் என்று விசாரித்தபோதுதான் கவுதமின் கன்னிங்னஸ் தெரியவந்தது.
எடுத்தவரை ’தங்கமீன்கள்’ படத்தைப்போட்டுப்பார்த்த கவுதம், படம் ‘கற்றது தமிழ்’ மாதிரியே குவாலிட்டியான குழப்பமாக இருப்பதாகவும், இப்பிடியே ஃபினிஷிங் டச் வரை ராமையே விட்டால், படம் பேரு சம்பாதிக்கும் ஆனால் துட்டு சம்பாதிக்காது என்று முடிவு செய்து, எடிட்டிங்கில் தானும் உட்கார வேண்டும் என்று முடிவு செய்தே இப்படி படத்தை பெண்டிங்கில் வைத்திருக்கிறாராம்.
ஆனால் ராமிடம் இதைச்சொல்ல முடியுமா ?
’’ நீங்க இழுத்துவச்ச மூனு மடங்கு செலவால, இப்ப என் கையில போஸ்ட் புரடக்ஷன் வேலை செய்ய காசு இல்ல. என் படம் ரிலீஸான பின்னால உங்க பட வேலைகளை ஆரம்பிப்போம்’ என்று கவுதம் சொல்ல,
‘’அடுத்த பத்து வருஷங்கழிச்சி பண்ணப்போற படத்துக்கெல்லாம் துப்பறிஞ்சி அட்வான்ஸ் வாங்குறீங்க. உங்க கிட்ட பணம் இல்லைங்கிறதை நான் நம்பனுமா ?’’ என்று மைண்ட் வாய்ஸில் மனம் புழுங்கியபடி, தினம் ஆபிஸ் போய் வந்துகொண்டிருக்கிறா ராம்.