வரும் வெள்ளியன்று திருவாளர் ‘சகுனி’யோடு ரிலீஸ் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ‘பில்லா 2’ ரிலீஸாக மேலும் மூன்று வாரங்கள் வரை ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கின்றன படத்தை விலைக்கு வாங்கியிருக்கும் ஆஸ்கார் பிலிம்ஸ் வட்டாரங்கள்.
‘சென்சாரே வாங்கியாச்சி. ஏ’ சர்டிபிகேட் குடுத்திருக்காங்களாம். அப்புறம் ஏன் இன்னும் மூனு வாரம்?’ என்று நீங்கள் முனுமுனுப்பது கேட்கிறது.
இதற்கு பதிலாக பலவிதமான காரணங்கள் நடமாடுகின்றன. முதல் செய்தி, படத்துக்கு சென்சார் வாங்கும்போது, அஜீத்தின் டப்பிங் உட்பட, சில போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் பெண்டிங்கில் இருந்தனவாம்.
அடுத்ததாக,’ சகுனியையும் மூன்று ஏரியாக்களுக்கு பெரிய விலை கொடுத்து வாங்கியிருக்கும் ஆஸ்கார் ரவி, பில்லாவை எப்படியாவது மேலும் இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைக்கும் நோக்கத்தில் எந்த ஏரியாவிலுமே தியேட்டர் எடுக்கும் வேலையில் இறங்கவில்லையாம். எனவே ஜூன் 6 அல்லது 7 ம் தேதிதான் ‘பில்லாவை ரிலீஸ் பண்ணுவது என்பதில் ஆரம்பத்திலிருந்தே அவர் உறுதியாக இருந்திருக்கிறார்.
இந்த ரிலீஸ் குழப்பத்தை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்ட ‘சகுனி’ கோஷ்டி, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தலைமையில், கடந்த இரு தினங்களாக பெரும் பொருட்செலவில் இண்டஸ்ட்ரி முழுக்க, ஒரு பரபரப்பான வதந்தியைப் பரப்பி விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
அதாகப்பட்டது, படத்தை விலைக்கு வாங்கியிருக்கும் ஆஸ்கார் ரவிச்சந்திரன் படம் சென்சார் ஆன மறுதினம் ஒரு பிரிவியூ தியேட்டரில் தனி ஆளாக ‘பில்லா 2’ படம் பார்த்தாராம். படு அப்செட் ஆனாராம். படம் பார்த்து முடித்த அந்த நிமிடத்திலிருந்தே, படத்தை யாருக்காவது கைமாற்றி விட முடியுமா என்று கன்னாபின்னாவென்று அலைகிறாராம்.
இந்த வதந்திகளைப் பரப்பிய ‘EVERY MAN HAD A சிக்கன்பிரியாணி அண்ட் எ குவார்ட்டர்.