’’தம்பி, உன்னப்பாத்து எவ்வளவு நாளாச்சி, எப்படா ஷூட்டிங் முடிஞ்சி வீடு திரும்புவ’’?
‘’ தெரியாதும்மா, ஒரு மாசத்துல முடியலாம். ஒருவேளை ரெண்டு மாசம் கூட ஆகலாம். எதுவும் உறுதியா சொல்லமுடியாதும்மா’’
‘’ ஏன் உங்க டைரக்டர் கிட்ட படம் எப்ப முடியும் சார்னு கேக்கவேண்டியதுதான ?’’
‘’ வேற வெனையே வேண்டாம். இதுமாதிரில்லாம் கேள்வி கேட்டா கடிச்சி வச்சிருவாரு. அதுவும்போக படம் எப்ப முடியுமுன்னு அவருக்கே தெரியாதும்மா’’
’’என்னடா தம்பி சொல்ற கடிச்சி வச்சிருவாரா, கேக்கவே பகீருங்குதேடா ?’’
‘’சரி அதைவிடு. உனக்கு என்னப்பாக்கனும்போல இருந்தா இங்க மூணாறு கிளம்பி வா. மேனேஜர் கிட்ட சொல்லி டிக்கட் போடச்சொல்லவா?’’
‘’இல்ல டிக்கட் இங்க நமக்கு தெரிஞ்ச டிராவல்ஸ்லயே எடுத்துட்டு நாளைக்கே கிளம்பி வர்றேன்’’
-மகனை பாலாவின் படத்துக்கு அனுப்பிவிட்டு, வீட்டில் தனியே தவித்துக்கிடந்த அம்மா ஷோபாவுக்கும் அவரது மகன் அதர்வாவுக்கும் நடந்த உரையாடல்.
அதன்படியே கடந்த சில தினங்களுக்கு முன்பு, பாலாவின்’ ’எரியும் தணல்’ ‘பரதேசி’ என்று பெயர் சூட்டப்படாத படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த மூணாறு சென்ற ஷோபா மூன்று தினங்கள் தன் மகனுடன் தங்கியிருந்தார்.
ஆனால் அந்த மூன்று தினங்களுமே ஷூட்டிங் ஸ்பாட் பக்கமே ஏட்டிக்கூட பார்க்கவில்லை.
இறுதியில் ரிடர்ன் டிக்கட் போடுவது குறித்து, படத்தின் தயாரிப்பு நிர்வாகியான பாலாவின் மச்சானை அதர்வா அணுகியபோதுதான், அவர் மூலமாக தகவலே பாலாவுக்கு தெரிந்ததாம்.
‘’என்ன அதர்வா, உங்க அம்மா கிட்ட என்னை டெர்ரரிஸ்டுன்னு சொல்லிவச்சிருக்கியா. நம்ம ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வராம ஹோட்டலோட ஊருக்கு கிளம்பிடாங்க’’ என்றாராம் பாலா.
இதெல்லாம் சொல்லியா தெரியணும் .நாட்டுநடப்புகள அவங்களும் பத்திரிகைகள் மூலமா படிச்சிக்கிட்டுதான இருப்பாங்க பாஸ்?
.