’நான் உமி கொண்டு வர்றென், நீ அரிசி கொண்டு வா, ரெண்டுபேரும் ஊதி ஊதித்திங்கலாம்’ என்று சேரனின் மதுரை ஏரியாப்பக்கம் ஒரு பிரபலமான பழமொழி உண்டு.
கடந்த ஒரு மாதகாலமாக அந்த பழமொழியை நடைமுறைப்படுத்த பெருமுயற்சி எடுத்து வருகிறார் சேரன்.
மேட்டர் இதுதான்.
நடிகை ரோகினி ஒரு படம் இயக்கும் ஆர்வத்தில் இயக்குனர் சேரனுக்கு ஒரு கதை சொன்னார். அந்தக் கதை சேரனுக்கு மிகவும் பிடித்துப்போகவே, ‘நாமளும் சும்மா இருக்கோம். ஆபிஸ்லயும் ஒரு வேலையும் ஓடலை. அதனால இதையாவது செய்வோம்’ என்ற அடிப்படையில் ரோகினியின் படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டார்.
பட் அந்தப்படத்தை தயாரிக்க ரோகினியுடன் சேரன் போட்ட டீலிங் ரொம்ப சின்னப்புள்ளத்தனமானது.
‘’ மேடம் சினிமாவுல என்னோட நிலைமையே ஐ.சி.யு. லெவல்ல தான் இருக்குது. உங்க கதை ரொம்ப புடிச்சிருக்கதால தயாரிக்க சம்மதிக்கிறேன். பிலிம்,கேமரா வாடகை, பேட்டா மாதிரி தவிர்க்கமுடியாத செலவுகளை மட்டும்தான் என்னால செய்யமுடியும். ஆனா படத்துல நடிக்கிறவங்க, டெக்னீஷியன்ஸ் யாருக்கும் என்னால நயா பைசா சம்பளம் தர முடியாது. அவார்டுக்காக படம் எடுக்கிறேன். பெருந்தனமையா சேரன் தயாரிக்கிறார். அதனால ஃப்ரீயா நடிச்சிக்குடுங்கன்னு எல்லார்கிட்டயும் நீங்கதான் பேசனும்’’
எப்படியாவது ஒரு படம் இயக்கவேண்டும் என்ற ஆசையில் சேரனின் இந்த உமி,அரிசி மேட்டருக்கு ஒத்துக்கொண்ட ரோகினி, ‘ஓ.சி.யில் ஒத்துழைப்பு கொடுக்க சாத்தியமுள்ளவர்கள்’ என்று ஒரு பட்டியல் தயாரித்துக்கொண்டு செல்போன் மூலம் அவர்களை சேஸ் செய்துகொண்டு வருகிறாராம்.
ஓ.கே. ஓ.கே. ஸ்டைல்ல படத்துக்கு பேசாம, ‘ஒரு அரிசி ஒரு உமி’ன்னே பேரு வச்சிருங்களே?