‘விஸ்வரூபம்’ படத்தை, தனது வேறெந்த படங்களையும் விட, அதிக நாட்கள் கமல் ஷூட் பண்ணியதற்கான ரகஸியம் இப்போது அம்பலப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு,இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் தயாராகி, இப்போது ஃபைனல் மிக்ஸிங் நிலவரத்தில் இருக்கும் ‘விஸ்வரூபம்’ படம் தனக்கு பொருளாதார ரீதியாக பெரும் இழப்பை ஏற்படுத்தி இருப்பதுபோலவே கமல் நீண்ட நாட்களாகப்பேசிவருகிறார். படத்தின் பட்ஜெட் 120 கோடியை எட்டிவிட்டதாகவும் மூன்று மொழிகளிலும் சேர்த்து விற்றால் கூட அது ’கவர்’ ஆகுமா என்ற கவலை தனக்கு இருப்பதாகவும் ஸ்டேட்மெண்ட் விட்டுவந்த கமல், நடுவில் படு வெவராமாக ஒரு காரியம் செய்திருக்கிறார்.
யெஸ் ஒரே கல்லில் ரெண்டு விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் கமல். இப்போது போஸ்ட் புரடக்ஷன் பணிகளுக்கு சென்று கொண்டிருக்கும் ‘விஸ்வரூபம்’ படம் சுமார் நான்கு மணி நேரம் ஓடுகிறது. ஆனால் ரெண்டரை மணி நேரத்திற்கும் மேல் ஓடினால் எப்படிப்பட்ட காவியத்தையும் மக்கள் பார்க்கமாட்டார்கள் என்பது உலகநாயகனுக்கு தெரியாதா?
இங்கேதான் கமலின் ராஜதந்திரம் துவங்குகிறது.
படத்தின் படப்பிடிப்பு பாதியில் இருக்கும்போதே, ’ விஸ்வரூபம்-பார்ட் 2’ எடுக்கலாம் என்று கமல் முடிவுசெய்து, அதற்கான காட்சிகளையும் சேர்த்தே ஷூட் பண்ண ஆரம்பித்துவிட்டார். ஆனால் அதை வெளியே சொன்னால், பேட்டா, சம்பள சமாச்சாரங்கள் இடிக்கும். தயாரிப்பில் பார்ட்னராக இருக்கும் பி.வி.பி, நிறுவனம் பார்ட்-2 விலும் பங்கு கேட்கும். எனவே அந்த தனது யோசனையை யாரிடமும் சொல்லாமல், ஏறத்தாழ பார்ட்-2வின் முக்கால்வாசி படத்தையும் முடித்துவைத்து விட்டார் கமல்.
ஷூட்டிங் நடந்த காலகட்டத்தில் யாராலும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்த இந்த சங்கதி போஸ்ட் புரடக்ஷன் நடந்த சமயத்தில் ஏறத்தாழ அனைத்து டெக்னீஷியன்களுக்குமே புரிந்துவிட்டது.
ஒரு பட பட்ஜெட்டில் இரண்டு படம் எடுத்த சாகஸத்தை நிகழ்த்தியவர் கமல் ஆச்சே. அதனால் மனசுக்குள் மருகுவதைத்தவிர வேறு என்ன செய்ய முடியும் அவர்களால்?