சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தடபுடலாக ஆரம்பிக்கப்பட்ட விக்ரமின்,’கரிகாலன்’ படத்தை, அவரது தீவிர ரசிகர்களே கூட மறந்திருப்பார்கள்.
ஆனால் பெரும் பணம் போட்ட தயாரிப்பாளர்களும், படத்தின் இயக்குனரும் அப்படி மறக்க முடியுமா?
‘தாண்டவம்’ முடிந்தபிறகு விக்ரம் எப்படியும் தங்கள் பக்கம் கருணைக்கண் காட்டுவார், மீதிப்படத்தை எப்படியாவது முடித்துவிடலாம் என்று எதிர்பார்த்திருந்த அவர்களுக்கு, ஷங்கர்-விக்ரம் கூட்டணியின் ‘ஐ’ பட அறிவுப்பு,’ ஐயோ’ என்று அழவேண்டிய கரிகாலனின் இரங்கல்செய்தி அறிவிப்பு போலவே இருந்ததாம்..
லண்டன் ஷெட்யூல் முடிந்து, கடந்தவாரம் சென்னை திரும்பிய விக்ரமை தயாரிப்பாளர்கள் பார்த்தி,,வாசன் ஆகியோர் தொடர்புகொண்டபோது, ‘’டைரக்டர கூப்பிட்டுட்டு வராம நீங்க மட்டும் வாங்க உங்களுக்கு ஒரு குட் நியூஸ் வச்சிருக்கேன்’’ என்றாராம்.
‘’எனக்கு டைரக்டர் கண்ணன் மேல சுத்தமா நம்பிக்கை இல்லை. இதை பலமுறை சூசகமா சொல்லியும் நீங்க கேக்காததாலதான், உங்க ‘கரிகாலன்’ லேட்டாகிக்கிட்டிருக்கு’ .ஜூலை 15லருந்து ‘ஐ’ பட ஷூட்டிங் போறேன். நீங்க வேற ஒரு டைரக்டரை போட்டுட்டு கதையில ஏதாவது கரெக்ஷன் பண்ணிக்கிட்டேயிருங்க. ஏதாவது ஒரு கேப்ல ஆரம்பிச்சிரலாம்’’ என்று தேறுதல் சொல்லி அனுப்பிவைத்தாராம்.
தற்போது பழைய டைரக்டர் கண்ணனுக்குப் பதிலாக ‘செல்லமே’ காந்திகிருஷ்ணா நியமிக்கப்பட்டு, ஷூட்டிங் தேதிகளே கண்ணுக்குத்தெரியாத கரிகாலனின் கதையில் கரெக்ஷன் செய்துகொண்டிருக்கிறார்களாம் தயாரிப்பாளர்கள்
இருக்கிற நிலைமையைப் பார்த்தால் கொஞ்சம் வயசான கரிகாலனைத்தான் நாம் சந்திக்க முடியும் போலிருக்கிறது..