anushyaputiran

பொதுவாக ஆடியோ வெளியீட்டு விழாக்களில், ஜால்ரா சத்தங்கள் காதைக்கிழிக்கும். ஆனால் இன்று காலை பிரசாத் லேப்பில் நடந்த ‘கலியுகம்’ படத்தின் வெளியீட்டுவிழா வேறுவிதமாக இருந்தது.

இந்தப்படத்தில் பிரபல இலக்கியவியாதி மனுஷ்ய புத்திரன் முதன்முதலாக ஒரு பாடல் எழுதியிருக்கிறார்.[ இதற்கு முன் கமலின் ‘உன்னைப்போல் ஒருவனில் ஒரு பாட்டு எழுதினாராம்.அது வெளியாகவில்லை]

இந்தப்பாடலை வாழ்த்திப்பேசிய கவிஞர் அறிவுமதி, மனுஷ்யபுத்திரன் குங்குமத்தில் ’;வழக்கு எண்’ படத்தை துவைத்து காயப்போட்டுவிட்டதாக குறைபட்டுக் கொண்டார்.

மனுஷ் போன்ற சிறுபத்திரிகையாளர்கள் ‘வழக்கு எண்’ போன்ற நல்ல படத்தையே விமர்சனம் செய்தால், வருங்காலத்தில் திறமையான தம்பிகள் வாய்ப்பு பெற்று எப்படி படம் இயக்கமுடியும்? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் சொன்ன மனுஷ், “தமிழில் எத்தனையோ குப்பைகள் வந்திருக்கின்றன. அத்தனைக்கும் நாங்கள் பேசவில்லை. மணிரத்னம், பாலா, வசந்தபாலன், பாலாஜிசக்திவேல் போன்றோர்களுடன்தான் எங்களால் சண்டை போட முடியும்..! இது போன்ற விமர்சனங்கள் வந்தால்தான் தமிழில் இதைவிடவும் நல்ல படங்களைக் கொடுக்க முடியும்..” என்பது போல் பேசினார்.

இடையில் வந்து மைக்கை வாங்கிய தயாரிப்பாளர் எடிட்டர் மோகன், “மனுஷின் விமர்சனம் எங்களைக் காயப்படுத்துகிறது. ஒரு தயாரிப்பாளரின் வலி நிச்சயமாக இவருக்குத் தெரியாது.. உங்களது விமர்சனத்தைப் படித்துவிட்டு தியேட்டருக்கு போகவிருக்கும் 10 பேரும் திரும்பிப் போய்விட்டால்… எங்கள் நிலைமை என்ன ? இதனால் தயாரிப்பாளருக்குத்தான் நஷ்டம்.. எங்களைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் தனிப்பட்ட முறையில் உங்களது கருத்துக்களை இயக்குநரிடம் சொல்லலாமே..?” என்றார்.

மீண்டும் மைக்கை பிடித்த கவிஞர் அறிவுமதி, “இலக்கியவாதிகள் விமர்சனம் செய்யத்தான் செய்வார்கள் என்கிறார் மனுஷ். இவருடைய பதிப்பகத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற பெரிய இலக்கியவாதிகள் புத்தகம் எழுதியிருக்கிறார்கள். ஆனால் இவரோ கமலஹாசனை தனது கடையில் முன்னிறுத்துகிறார். ரஜினியை அழைத்துதான் பாராட்டுவிழா எடுக்கிறார். கமலஹாசன் இலக்கியவாதி இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் எஸ்.ரா.வைவிட கமலஹாசனை முன்னிறுத்தும்போது நீங்கள் எங்களது இயக்குநர்களைக் குறை சொல்ல கொஞ்சமும் அருகதை கிடையாது.. அது இன்னும் உங்களுக்கு வரவில்லை என்று மனசாட்சியுடன் என் நெஞ்சைத் தொட்டுச் சொல்கிறேன்..” என்று கொதித்தார்.

மீண்டும் முடிவுரைக்கு வந்த மனுஷ்யபுத்திரன், எங்களுடைய விமர்சனங்கள் உங்களைக் காயப்படுத்துவதாக இருந்தால், இனிமேல் உங்களுடைய சினிமா மேடைகளுக்கு என்னைப் போன்ற இலக்கியவாதிகளை கூப்பிடாதீர்கள்..” என்று பொரிந்துவிட்டு அமைதியானார்..!

நிகழ்ச்சி முடிந்து, அறிவுமதி மேடையை விட்டு இறங்கியதும்,’கலியுகம்’ படக்குழுவினர் உட்பட ஒரு பெரிய கூட்டம் அறிவுமதியைச் சூழ்ந்துகொண்டு வாழ்த்துச்சொல்லி கைகுழுக்க, மனுஷ்யபுத்திரனோ தனி மனிதராய் ஒரு மரத்தடியில் அமர்ந்து வெஜிடபிள் பிரியாணியை வெறுப்பாய் சாப்பிடலானார்.

பி.கு: கீழே உள்ள செய்தியின் தொடர்ச்சி, அறிவுஜீவி என்று தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும், இலக்கிய வியாதி, மனுஷ் தனது ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொண்டது;

இன்று கலியுகம் படத்தின் ஆடியோ ரிலீஸ் சிறப்பாக நடந்தது. விழாவில் பேச வந்த கவிஞர் அறிவுமதி ’ என் உடன் பிறந்தான் மனுஷ்ய புத்திரன் இந்தப் படத்தில் எழுதியுள்ள ’’ஏனோ ஏனோ..’’என்ற பாடல் சிறப்பாக வந்துள்ளது’ என்று கூறி மேடையிலேயே கைகுலுக்கி விட்டு வழக்கு எண் 18/9 படம் பற்றி நான் குங்கும் இதழில் எழுதிய விமர்சனதிற்காக என்னை கடுமையாக தாக்கத் தொடங்கினார். ’’இப்படிப்பட்ட படங்களை எவ்வளவு கஷ்டப்பட்டு எடுக்கிறோம் என்று எங்களுக்குத்தான் தெரியும்….உங்களைப் போன்ற சிறுபத்திரிகை ஆசாமிகள் இப்படி விமர்சித்தால் இப்படிப்பட்ட முயற்சிகள் எப்படி வளரும்? என்றார். நடிகர் ஜெயம் ரவியின் அப்பா எடிட்டர் மோகன் வந்து ‘’ விமர்சனத்தை பெர்சனலாக சொல்லுங்கள். வெளிப்படையா சொன்னா படம் ஓடாது..எங்களுத்தான் நஷ்டமாகும்’’ என்றார். நான் பதில் சொன்னேன் ‘’தமிழ் சினிமா என்ற குப்பைக்கூளத்திற்கு நடுவே உலகத் தரமான சினிமாவை எடுக்கவேண்டும் என்று கனவு காணும் கலைஞர்களுடன்தான் ஒரு எழுத்தாளனாக என்னால் விவாதிக்க முடியும். முட்டாள்களுடன் அல்ல. அந்த வகையில் நான் எப்போதும் .மணிரத்தினத்துடனும கமல் ஹாசனுடனும் வசந்தபாலனுடனும் பாலாஜி சக்திவேலுடனும் சண்டை போடுவேன், உங்களுக்கு எழுத்தாளர்கள் அறிவிஜீவிகளின் கருத்துக்கள் தேவை இல்லை எனில் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கேட்காதீர்கள். அவர்களை உங்கள் மேடைக்கு அழைக்காதீர்கள்தமிழில் மிகச் சிறந்த கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மகத்தான படங்களை எடுப்பார்கள்.. அவர்களுக்கு சலுகை காட்டச்சொல்லி அவர்களை அவமதிக்காதீர்கள்’. ’ என்றேன்.

manushmanushya

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.