mib3-poster-1

வில் ஸ்மித்ம், டாம்மி லீ ஜோன்ஸும் மூன்றாவது முறையாக இணைந்து கலக்கியுள்ள எம்.ஐ.பி(மென் இன் ப்ளாக் – Men In Black) – 3 திரையிட்ட முதல் வாரத்திலேயே வட அமெரிக்காவில் மட்டும் 7 கோடி டாலர் கலெக்ட் செய்துள்ளது.

இந்தப் பாகத்தில் வில் ஸ்மித் காலத்தில் பின்னோக்கிப் பயணப்பட்டு இளம் வயது டாம்மி லீ ஜோன்ஸை ஒருவன் கொலை

செய்ய முயல்வதைத் தடுக்கிறார்.

எம்.ஐ.பியின் முந்தைய இரு பாகங்களைப் போலவே இப்பாகமும் படம் முழுதும் நகைச்சுவையும், சாகசங்களும், வேற்று கிரக ஏலியன்களும் நிரம்பியது.

சோனி பிக்சர்ஸ் இந்த கோடைகால விடுமுறையை குறிவைத்து வெளியிட்ட முதலாவது பெரும் பட்ஜெட் படம் இது. 31 கோடி டாலர் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்தின் வெற்றி பெரும் லாபத்தை ஈட்டித் தரும் என்று கணக்கிடப்படுகிறது. இதில் சோனிக்கு கிடைக்கும் பங்கில் 25 சதவீதம் வில் ஸ்மித்துக்கு கிடைக்கும்.

அடுத்ததாக சோனி பிக்சர்ஸ் ஜூலை 3ல் ஸ்பைடர் மேன் 4ம் பாகத்தை வெளியிட இருக்கிறது. 21 கோடி டாலர்கள் செலவில் எடுக்கப்பட்ட ஸ்பைடர் மேன்-4 ல் முந்தைய படங்களில் ஸ்பைடர் மேனாக நடித்த டோபி மாகுயர்(Tobey Maguire)க்குப் பதிலாக ஆண்ட்ரூ கேர்பீல்டு (Andrew Garfield) ஸ்பைடர் மேனாக நடிக்கிறார். இதன் விளைவு என்னவாக இருக்கும் என்பது படம் வெளிவந்தால் தெரியும்.

ஸ்பைடர் மேனுக்கு அடுத்து சோனி பிக்ஸர்ஸ் வெளியிட இருக்கும் பெரிய பட்ஜெட் படம் டோட்டல் ரீகால் (Total Recall). இது 2002ல் ஆர்னால்ட் ஸ்வார்ஸெனகர், ஷேரன் ஸ்டோன் நடித்து வெளியான படத்தின் ரீமேக்.

இதில் சென்னையிலும் எம்.ஐ.பி – 3 தமிழில் வெளியிடப்பட்டு கலக்கிக் கொண்டிருக்கிறது என்பது கையில் கிடைத்த பிட்டுச் செய்தி.

mib-willsmith-2 mib-willsmith-3

Related Images: