பெட்ரோல் விலைவாசி உயர்வை மறந்து விட்ட மக்களின் மனதில் இடம் பெற்றுக்கொண்டிருக்கும் அடுத்த தலைப்புச்செய்தி, ‘மணிரத்னம் படத்துல இருந்து சமந்தா வெளியேறிட்டாராமே’? என்பதுதான்.
‘சமந்தா ஒன்றும் வெளியேறவில்லை. தொடர்ந்து இரண்டு முறை கால்ஷீட் தேதிகளை தள்ளிப்போட்டதால் மணி சார் தான்
சமந்தாவுக்கு பை பை சொல்லிவிட்டார்’ என்கிறது மணியின் தரப்பு.
சுமார் ஒரு மாதத்திற்கு முன்பே படப்பிடிப்பை துவக்கிய மணிரத்னம், முன்னெப்போதும் இல்லாதவகையில், சமந்தாவுக்காக அட்ஜஸ்ட் செய்துகொண்டு, மிகவும் பொறுமையாக படத்தில் அவர் இல்லாத காட்சிகளை மட்டும் ஷூட் பண்ணிக்கொண்டு வந்தார்.
ஒப்பந்தப்படி, வரும் ஜூன் 15 முதல் சுமார் 40 நாட்கள் வரை ‘கடல்’-ல் நடிக்க சம்மதித்திருந்தார் சமந்தா. அப்படி படப்பிடிப்புக்கு வரும்போது, ஒன்றிரண்டு தினங்கள் வெயிலில் கருத்து மீனவப்பெண் போன்ற டல் தோற்றத்திற்கு வந்த பிறகே படப்பிடிப்பை துவங்க முடியும்’ என் மணிரத்னம் சொல்லியிருக்கிறார்.
வெறும் மேக்கப்பில் டல் ஆனால் போதும் என்று நினைத்தால், மணி ஒரிஜினலாகவே கருக்கச்சொல்கிறாரே, இதை ஏன் கதை சொல்லும்போதோ, அட்வான்ஸ் வாங்கும்போதோ சொல்லவில்லை’ என்று பதறிய சமந்தா என்ன ஆனாலும் பரவாயில்லை . இந்தக்கடலிலிருந்து கரையேறிவிடவேண்டும் என்று முடிவெடுத்ததாக தெரிகிறது.
இதனால் திடீரென பல்டி அடித்த சமந்தா, ’தொடர்ந்து 40 நாட்கள் தந்தால், என்னை வைத்து படம் இயக்கிவரும் மற்றவர்கள், குறிப்பாக ‘நீதானே என் பொன் வசந்தத்தை’ தமிழிலும் தெலுங்கிலும் இயக்கிவரும் கவுதம் மிகவும் பாதிக்கப்படுவார்’ என்றதாகத்தெரிகிறது.
போனில் சமந்தாவின் மேற்படி விளக்கத்தைக் கேட்ட மணிரத்னம், ‘’ஷட் அப் அண்ட் செட்டில் த அட்வான்ஸ் அட் ஒன்ஸ் அட் மை ஆபிஸ்’’என்றபடி போனைத்துண்டித்துவிட்டாராம்.
இப்போது சமந்தாவின் இடத்தில் ராதாவின் இளையமகள் துளசியின் பெயர் அடிபடுகிறது.