வரும் ஆகஸ்ட் 15-ம் தேதியன்று திரைக்கு வந்தே தீருவோம் என்பது குறித்து விஜயின் ‘துப்பாக்கி’ ரசிகர்களும், சூர்யாவின் ‘மாற்றான்’ ரசிகர்களும் சில தினங்களுக்கு முன்புவரை ஒருவரை ஒருவர் ஒரண்டை இழுத்துக்கொண்டே இருந்தது ஊர் சிரித்து முடித்த சமாச்சாரம்..
உச்சக்கட்டமாக அந்த சம்பாஷனையில் கலந்துகொண்ட டைரக்டர் ஏ.ஆர். முருகதாஸ் சூர்யாவின் ரசிகர்களை பச்சாக்களாக சித்தரித்து ‘பாப்பா கொஞ்சம் தள்ளிப்போய் விளையாடு’ என்றெல்லாம்
கமெண்ட் அடித்தார்.
‘ஈ’ படம் பார்ப்பதற்கு முன்பே அது நடந்ததால், ’ ஈ’க்கு முன்னால விஜயாவது, சூர்யாவாவது தெரியாமல் சண்டை போட்டுக்கொண்டார்கள் என் தேவனே அவர்களை மன்னித்தருளும்’ என்று சொல்வதைத் தவிர வேறுவழியில்லை.
ஆனால் இப்போது அதையும் தாண்டிய ஒரு விசயம் ஆகஸ்ட் 15-க்கு இரு படங்களுமே வரப்போவதில்லை
.
‘துப்பாக்கி’ கோஷ்டிகள் இன்னும் குறைந்த பட்சம் ஷூட்டிங் பாக்கியே 15 நாட்களுக்கு மேல் வைத்துக்கொண்டு, கோர்ட் மூலமாக டைட்டிலை மீட்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.
இது தொடர்பாக தனது நெருங்கிய வக்கீல்கள் மூலம் முருகதாஸ் ஆலோசித்துக்கொண்டிருந்த வேளையில், விஜயின் தந்தை எஸ்.ஏ.சி,’’எங்கிட்ட ஒரு சூப்பர் ஐடியா இருக்கு. எதுக்கு தேவையில்லாம ‘கள்ளத்துப்பாக்கி’ தயாரிக்கிறவங்களோட மோதனும்? பேசாம விஜய் தம்பியோட சூப்பர் ஹிட்டான போக்கிரி’ படத்தோட பார்ட்-2’ன்னே டைட்டில் வச்சிரலாமே என்று யோசனை கொடுக்க, வாந்திபேதி கண்டவர் போல் ஒரு வருத்தமான எக்ஸ்பிரசன் கொடுத்தாராம் முருகதாஸ்.
இவர்கள் கூடாரம் இப்படியிருக்க,’ மாற்றான்’ கோஷ்டிகளோ ‘அந்நியன்’ விக்ரம் போல் மல்டிப்பில் பிரச்சினைகளில் சிக்கி மருகிக்கொண்டிருக்கிறார்களாம்.
அடர்ந்த காட்டுப்பகுதி என்பதால் சூர்யா நடிக்க மறுத்த ஒரு பாடல்காட்சி உட்பட இன்னும் 20 நாட்கள் ஷூட்டிங் மட்டுமே பாக்கி. அதிலும் படத்தில் இரட்டையர்களாக வரும் சூர்யாக்களை இரண்டாகப்பிரித்தெடுக்கும் முக்கியமான காட்சிகூட இன்னும் எடுக்கப்படவில்லை.
‘ஹலோ வெயிட்…வெயிட்.. இது என்ன புதுக்கதையா இருக்கு? மாற்றான்’ல சூர்யா இரட்டைப்பிறவின்னு இதுவரைக்கும் சொல்லவேயில்லையே?? அதுவுமில்லாம இப்ப சமீபத்துல பிரியாமணி கூட ‘சாருலதா’ங்குற படத்துல ட்வின்ஸாதான நடிக்கிறாங்க??/
‘’உங்க கேள்வியெல்லாம் சரிதான். சாருலதா படத்தோட டைரக்டரு ஓரளவுக்கு நேர்மையானவரு. அதனால 2007-ல் வெளிவந்த தாய்லாந்து படமான ‘அலோன்’ படத்தோட உந்துதலால இதை எடுக்குறேன்னு சொல்லிட்டார். ஆனா கே.வி. ஆனந்த் சொஸைட்டியில பெத்த பேரும் செல்வாக்கும் பெற்ற டைரக்டராச்சே. எங்க இருந்து சுட்டேன்னு வெளிய சொன்னா கொஞ்ச பேராவது அவரோட வேட்டிய உருவி நாட்டியமாடிற மாட்டீங்களா அதனாலதான் அவர் வெளிய சொல்லாம ரகஸியம் காக்குறார்.
சரி பழைய மேட்டருக்கு வருவோம்.
இப்படி வேலைப்பளுக்கள் அதிகம் வைத்துக்கொண்டு ஆகஸ்ட் 15 என்று தேவையில்லாமல் அறிவித்துவிட்டோமே என்று ‘மாற்றானும்’ துப்பாக்கி’ கோஷ்டிகளும் பதுங்கிக்கொள்ள முடிவு செய்ய அதே தேதியில் ‘கள்ளத்துப்பாக்கி’யும் ‘சாருலதாவும் ரிலீஸானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.