கடைசியாக ‘அரவான்’ தந்த அதிர்ச்சியில், சற்றே தலைமறைவானாக திரிந்து வந்த தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, தற்போது சுறுசுறுப்பாக இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.
திருமணத்துக்குப்பிறகு, நடிகை மீனா நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரகாஷ் ராஜ் நடிக்கும் விளம்பரப்படம் ஒன்றை இயக்க ஆரம்பித்திருக்கும் சிவாவின் அடுத்த டார்கெட், கமர்ஷியல் படங்களை இயக்குவதுதானாம்.
‘அரவான்’ படஇயக்குனர் வசந்த பாலனால் கிடைத்த, கசந்த கால அனுபவத்துக்குப்பிறகே இப்படி ஒரு முடிவை அவர் எடுத்ததாகவும், ‘அரவானோட ஒப்பிடுறப்ப இந்த சிவா, அதை விட நல்ல டைரக்டரா வருவான்’ என்றும் தனது நண்பர்களிடம் தெரிவித்ததாகவும் தகவல்.
இதற்கிடையில் ரஞ்சிதா, நித்தியானந்தா கோஷ்டிகள் துவங்கவிருக்கும் சானல் ஒன்றுக்கு சிவா முழுப்பொறுப்பேற்க இருப்பதாகவும் அதற்கான பூர்வாங்க வேலைகளில் இறங்கி, தொடர்கள் மற்ற நிகழ்ச்சிகள் தயாரிக்கும் பணியில் அவர் ஈடுபட்டிருப்பதாகவும், சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிவாவின் இயக்குனர் அவதாரமே அதை ஒட்டி எடுக்கப்பட்டது என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் வழக்கம்போல் இந்த தகவலை மறுக்கும் சிவா, ‘’இப்படி ஒரு செய்தி தொடர்ந்து என் காதுகளுக்கும் வந்துகொண்டேதான் இருக்கிறது.ஆனால் இதில் துளியும் உண்மை இல்லை’’ என்கிறார்.
சிவாவின் அம்மா கிரியேஷன்ஸ் அலுவலகம் இயங்கி வருவதே ரஞ்சிதாவின் சொந்தக்கட்டிடத்தில் தான் என்பதால் இப்படி ஒரு செய்தி நடமாடுகிறதோ என்று எடுத்துக்கொண்டாலும், நித்தி இப்போது சிக்கலில் மாட்டியுள்ளதால்தான் சிவா உண்மையை மறைக்கிறாரோ என்ற கோணத்திலும் யோசிக்காமல் இருக்க முடியவில்லை.