ராதாவின் மகள் ‘கோ’ கார்த்திகாவை சந்திக்க செல்பவர்கள் கைவசம் அட்லீஸ்ட் அரைடஜன் கர்சீப்களாவது எடுத்துச்செல்வது நல்லது.
சில தினங்கள் முன்புவரை ’ உள்ள அழுகிறேன் வெளிய சிரிக்கிறேன்’ என்று உணர்ச்சிகளை கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணிக்கொண்டு இருந்தவர், சமீப காலமாக ‘உள்ளயும் அழுகிறேன் வெளியவும் அழுகிறேன்’ என்று
சற்று ஓப்பனாகவே புலம்ப ஆரம்பித்துவிட்டார்.
எல்லாம் குருநாதர் பாரதிராஜாவைப்பற்றித்தான். என்றைக்கு அவரது ‘அன்னக்கொடியில் எடுத்து படரவிட ஆரம்பித்தாரோ அன்றிலிருந்து வேறு எந்தப்படங்களிலும் கமிட் ஆகமுடியாமல் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறார் கார்த்திகா.
கே.வி.ஆனந்தின் ‘கோ’ மட்டுமின்றி கார்த்திகா நடித்த தெலுங்குப்படமான ‘தம்மு’வும் கூட ஹிட்டாகி நல்ல துட்டு பார்த்த படமே. எனவே தமிழிலும் தெலுங்கிலும் கார்த்திகாவுக்கு கணிசமான அளவில் டிமாண்ட் இருந்துகொண்டுதான் இருந்தது.
சின்னச்சின்ன உப்புமா படங்களில் கமிட் ஆகாமல் காப்பாற்றுவாரே என்ற எண்ணத்தில், குருநாதர் என்ற விசுவாசத்தில் கார்த்திகாவின் கால்ஷீட் மேனேஜர் போல, அவரது எதிர்காலம் குறித்த அனைத்து முடிவுகளையும் எடுக்கும் பொறுப்பையும் பாரதிராஜா வசமே ஒப்படைத்திருந்தார் ராதா.
சூழல் இப்படியிருக்க தனது ‘அன்னக்கொடியையும் முடிக்காமல், தன்னையும் வேறு படங்களில் கமிட் ஆகவிடாமல், பாரதிராஜா தன்னை எமோஷனல் டார்ச்சர் செய்துகொண்டிருப்பதாக தனது அம்மா ராதா உட்பட அனைவரிடமும் புலம்ப ஆரம்பித்துவிட்டார் கார்த்திகா.
அதுவுமின்றி ’அன்னக்கொடியை’ எப்போது முடிக்கப்போகிறேன் என்று தெரிவிக்காமல், ‘பொம்மலாட்டம்’ படத்தை ஹாலிவுட்டில் இயக்கப்போகிறேன் ‘என்று பாரதிராஜா பேட்டி கொடுக்க ஆரம்பித்திருப்பது கண்டு பெரும் பீதிக்கு ஆளாகி, இனி வீதிக்கு வந்தே அழலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறாராம் கார்த்திகா
.
அம்மாவை ஆக்குனாரு டாப்பு. ஆனா பாப்பாவுக்கு வச்சாரு ஆப்பு’ன்னு எதிர்கால சந்ததி ஏளனமா பேசிடாம சட்டுபுட்டுன்னு ஏதாவது நல்ல முடிவா எடுங்க சார்.