’’ உங்கள மட்டும் தனியா சந்திக்கனும். மார்னிங் 9.30 க்கு 4 ப்ரேம்ஸ் தியேட்டருக்கு வர முடியுமா?’’ ஷ்ரேயாவிடமிருந்து சில்லென்று ஒரு அழைப்பு. தட்டமுடியுமா?
ஆனாலும் மனசுக்குள் ஒரு டவுட்டு கேட்டே விட்டேன், ‘ மொத்த பிரஸ்சையும் மீட் பண்றமாதிரி கேள்விப்பட்டேன். அப்புறம் ஏன் எனக்கு மட்டும் ஸ்பெஷல் கிளுகிளுப்பு?’’
‘’அட அவங்களையெல்லாம் 11.30க்கு போஸ்ட்போன் பண்ணியாச்சிப்பா, நீ சீக்கிரம் வந்து சேரு.எதுக்கெடுத்தாலும் தொணதொணன்னு பேசிக்கிட்டேயிருப்ப’’ ஒரு மகாராணியின் தோரணையில் உத்தரவு போட்டுவிட்டு போனைத்துண்டித்துக்கொண்டார் ஷ்ரேயா.
தியேட்டரை அடைந்ததும், ’’மேக்-அப் ரூம்ல இருக்காங்க. உங்கள மட்டும் வரச்சொன்னாங்க’’- ஒரு குட்டிச்சாத்தான் தகவல் தர உள்ளே சற்று உதறலோடே நுழைந்தேன்.
‘சிவாஜி’ யிலிருந்து இன்னும் ஒரு ஐந்து வயது குறைந்து சிக்கென்று காட்சியளித்தார் ஷ்ரே.
’’ நான் ஒரு இளவரசியா மாறி கொஞ்ச நாளாச்சி தெரியுமா?’’ என்று ஒரு புதிருடன் அவரே பேச ஆரம்பித்தார்.
‘’தீபா மேத்தா கூட ‘மிட்நைட்ஸ் சில்ட்ரன்’ ஷூட்டிங்ல இருந்தப்பதான், டைரக்டர் ரூபா மேத்தா என்னைத்தொடர்பு கொண்டாங்க. ஒரு ராஜபரம்பரையோட கடைசி வாரிசான இளவரசியோட காதல் கதை ஒண்ண படமா பண்ணப்போறேன் .படத்தோட டைட்டில் ’சந்திரா’. அதுல என்னோட இளவரசி நீதான்னு சொன்னாங்க. கதையோட அந்த ஐடியாவே எனக்கு ரொம்பப்புடிச்சிப்போச்சி. இதுக்கு முந்தி ரூபா ஐயர் இயக்கியிருந்த ‘முகப்புத்தகா’ படத்தைப்பத்தியும் நான் கேள்விப்பட்டிருக்கேன். ஒரு யோசனையும் இல்லாம உடனே ஒத்துக்கிட்டேன். ஷூட்டிங் நடக்கிறப்ப என்னை ஒரு ஒரிஜினல் இளவரசி மாதிரியே பாத்துக்கிறாங்க.
இளவரசியோட கதைன்ன உடனே,’’ யாரங்கே மாதம் மும்மாரி பொழிகிறதான்னு கேக்குற சரித்திரக்கதைன்னு நினச்சுடாதீங்க. சமூகம் தேட மறந்துபோன ராஜவம்சத்தின் கடைசி வாரிசுகளோட கதை இது.
’சந்திரா’ இது கன்னடப்படம் தானே?’’
‘’முதல்ல நானும் அப்பிடித்தான் நினைச்சேன். படத்தை கன்னடம், தமிழ் ரெண்டுமொழிகள்லயும் பண்ணப்போறோம்னு ரூபா சொன்னவுடனே எனக்கு சந்தோஷம் பிடிபடலை. எனக்கு ஜோடியா ‘அபியும் நானும்’ கணேஷ் வெங்கட்ராம் நடிக்கிறார். எங்க வீட்டு தத்துப்பிள்ளையா காமெடியில விவேக் கலக்குறார்.
‘மிட்நைட்ஸ் சில்ட்ரன்’ சந்திரா’ மாதிரி படங்கள்ல ஆர்வம் செலுத்த ஆரம்பிச்சுட்டீங்க. இனி பழையபடி கிளாமர் ஷ்ரேயாவை பாக்க முடியாதா?’’
அப்பிடி சொல்லமுடியாது. நடிப்பை பொருத்தவரை நான் தீர்மானம் போட்டுக்கிட்டு நான் எதுவும் செய்யிறதில்லை. இப்ப இந்த ‘சந்திரா’வை எடுத்துக்கங்க. ரூபா என்கிட்ட கதை சொன்னப்ப எனக்கு ஜோடியா நடிக்கப்போறவர் யாருன்னு கூட எனக்குத்தெரியாது. அவங்களா சொல்றவரைக்கும் நான் கேட்டுக்க கூட இல்லை.
’’ஸோ விதி எவ்வழி, நம் பயணம் அவ்வழி’’
சூப்பர் ஸ்டாருடன் நடித்த தோஷமோ என்னவோ ஸ்ட்ராங் பஞ்ச் டயலாக்குடன் முடிக்கிறார் ஷ்ரேயா.
இந்தப்பேட்டியை இன்னும் கொஞ்சம் விரிவாக படிக்க,’சந்திரா’ படம் ரிலீஸாகும் வரை பொறுத்திருங்கள்.