கவுதம் மேனனின் தயாரிப்பில் அவரது உதவியாளர் இயக்குவதாக இருக்கும் ‘தமிழ்ச்செலவனும் தனியார் அஞ்சலும்’ படத்தை விட்டு ரிச்சா கங்கோபாத்தியாயா, கோபமாக வெளியேறியவுடன், இனிமேல் தமிழ்ப்படங்களில் ரிச்சாவை தரிசிக்க முடியாதோ என்று லேசான உதறலுடன் அலைந்த ரிச்சா பக்தர்களுக்கு ஒரு அச்சா செய்தி.
வெங்கட் பிரபுவும் ‘சகுனி’ கார்த்தியும் கைகோர்க்கவிருக்கும் ‘பிரியாணி’ யில் ஆணி புடுங்கும் ஒரு முக்கியமான
ரோலில் ரிச்சா நடிக்கிறார்.
‘’சில படங்கள் நம் கையைவிட்டுப்போவதே அதைவிட நல்லபடம் கிடைப்பதற்கே என்ற நம்பிக்கை எனக்கு வெங்கட் பிரபு படம் கிடைத்ததன் மூலம் வந்திருக்கிறது. இன்னும் ஒரு அற்புதமான விசயம், இந்தப்படத்தில், நான் ஒரிஜினலாய் என்னவிதமான கேரக்டராய் இருக்கிறேனோ அதுவாகவே வருகிறேன்.
படத்தில் என்னைத்தவிர்த்து இன்னும் ஓரிரு ஹீரோயின்கள் இடம்பெறக்கூடும் எனினும் அதுகுறித்து எந்தக்கவலையும் கொள்ளத்தேவையில்லாத ‘நச்’ கேரக்டர் எனக்கு’’ இப்படியே தனது ட்விட்டரில் அளந்துகொண்டு போகும் ரிச்சாவிடம் இன்னும் வெங்கட் பிரபு கதையே சொல்லவில்லையாம்.
‘’நாங்களே ‘பிரியாணியை’ எந்த ஸ்டைல்ல கிண்டலாம்னு மண்டையைப்போட்டுக்குழப்பி, இப்பதான் ஒரு ரெண்டு நாளைக்கு முந்தி, சரி அதை ஒரு க்ரைம் த்ரில்லரா பண்ணுவோம்னு முடிவுக்கே வந்தோம். அதுக்குள்ள ரிச்சா தன்னோட கேரக்டரைப்பத்தி அவ்வளவு ரிச்சா ஃபீல் பண்ண ஆரம்பிச்சிருச்சா. அப்ப அந்தப்பொண்ணையும் நம்ம டிஸ்கசனுக்கு கூப்பிட்டுக்கலாம்பா’’ என்று சிரிக்கிறார்களாம் சென்னை28’ பசங்க.
அது சரிங்க பாய்ஸ், ‘பிரியாணி’யை வச்சிக்கிட்டு க்ரைம் த்ரில்லரா? குழப்பமா இருக்கே?
ஹாட் கேரியர்ல நாலு அடுக்குல ‘பிரியாணியை வச்சிட்டு, அஞ்சாவது அடுக்குல ஆனியன் கிச்சடிக்குப்பதில், பாம் வச்சிக்கிட்டு நம்மள பதற வய்ப்பாங்களோ? வரவர உங்க அழிச்சாட்டியம் தாங்கமுடியலிங்க சாமியோவ். ஸ்… சப சப சப…..