’’ரஜினியை சந்தித்தது உண்மை ஆனால் அவரை வைத்து படம் இயக்கும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை [?] ’’ என்று பார்ப்பவர்களிடமெல்லாம் புரூடா விட்டுக்கொண்டிருக்கும் கே.வி. ஆனந்த் தான் ரஜினியின் அடுத்த மற்றும் கடைசிப்படத்தை இயக்கப்போகிறார்.
யெஸ், ‘கோச்சடையானோடு சினிமாவுக்கு குட்பை சொல்லிவிடலாம் என்று நினைத்த ரஜினி, தன் மகள்கள் இருவரும் போட்டிபோட்டுக்கொண்டு வாங்கி வைத்திருக்கும் கடன்களை அடைப்பதற்காக இன்னும் ஒரு படமாவது நடித்தே தீரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
காம்பினேஷன் ரீதியாக அந்தப்படத்திற்கு பெரிய பிசினஸ் இருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்தபோது, ரஜினிக்கு தோன்றிய ஒரே பெயர் கே.வி.ஆனந்த்.
அதிகம் புழக்கத்தில் இல்லாத டி.வி.டி.களைச் சுட்டு,’அயன்’ ‘கோ’ வெற்றிப்படங்களைத்தந்த கே.வி.ஆனந்த் தற்போது ‘அலோன்’ ஸ்டக் யூ ஆன்’ மற்றும் சில படங்களிலிருந்து சுட்டு ‘மாற்றான்’ படத்தை இயக்கி வருகிறார்.திருட்டு பழம் மாதிரியே திருட்டு படத்திற்கும் ருசி அதிகம் போலும்.இதனால் தமிழ்சினிமாவில் கே.வி.ஆனந்துக்கு எக்கச்சக்க டிமாண்ட் உருவாகியிருக்கிறது.
ஏ.ஆர்.முருகதாஸ், கவுதம் மேனன்களைத்தாண்டி, கே,வி.ஆனந்த்-சூர்யாவின் ‘மாற்றான்’ படத்தை ஈராஸ் நிறுவனம் 83 கோடிக்கு வாங்கியிருந்தது, ரஜினியின் முடிவுக்கு முக்கிய காரணம் என்பது ஒருபுறமிருக்க, சமீபத்தில் சந்தித்தபோது ரஜினியிடம் மூன்று டி.வி.டி.களை தந்து பார்க்கச்சொன்னாராம் கே.வி.ஆனந்த்.
‘’எப்பிடி எப்பிடி, இப்பிடி யாருக்குமே கிடைக்காத டி.வி.டி.களை உங்களால மட்டும் ‘புடிக்க’ முடியுது’’ என்று வியந்த ரஜினி ,’’இந்த மூனு படங்களையுமே பாக்குறேன். ஆனா எதைச்சுட்டு படமாக்கலாம்ங்கிற முடிவை நீங்களே எடுங்க’’ என்று பரிபூரண சுதந்திரம் தந்து அனுப்பிவைத்தாராம்.
’சந்தர்ப்பம் இவ்வளவு சாதகமாக அமைந்திருக்க ரஜினி படத்தை இயக்கப்போகும் விசயத்தை, ஒவ்வொருவராக கூப்பிட்டு கே.வி.ஆனந்த் மறைப்பானேன்?’
அதற்கான காரணத்தை இன்னும் அதிகம் வளராத[!] கே.வி.அனந்துதான் சொல்லவேண்டும்.