அறிமுகமாகி வளர்ந்துவரும் சமயங்களில், சில இயக்குனர்களின் அன்புப்பிடியில் மாட்டிக்கொண்டு, வந்த சுவடு தெரியாமல் நொந்து திரும்பும் நடிகைகளின் கதைகளையும் நாம் அவ்வப்போது கேள்விப்பட்டிருக்கிறோம்.
தற்போது அப்படி ஒரு பாசவலையில் சிக்கித்தவித்துக்கொண்டிருப்பவர் மலையாளக் கரையோரத்திலிருந்து பறந்து வந்த மைனா லட்சுமி மேனன்.
‘மைனா’ ஹிட்டுக்கு அப்புறம் பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவை வைத்து ‘கும்கி’ படத்தை இயக்கிவரும் பிரபு சாலமன், ஒரு சில மலையாளப்படங்களில் மட்டுமே தலை காட்டியிருந்த லட்சுமி மேனனிடம்’ ‘’ என் படம் முடியும் வரை தயவுசெய்து வேறு படங்களுக்கு கால்ஷீட் தந்து குழப்பம் விளைவித்து விடாதே’’ என்ற அன்பு வேண்டுகோளுடன் தான் லட்சுமி மேனனையே கமிட் செய்தாராம்.
படப்பிடிப்பு, சொன்ன தேதிகளை விட பலமடங்கு அதிகமானாலும் கூட, இடையில் தன்னைத்தேடி வந்த பல பட வாய்ப்புகளை சிறிதும் சபலமின்றி உதறித்தள்ளினார் மேனன்.
இதில் அவர் மேல் ஓவர் அன்புக்கு ஆளான பிரபு சாலமன் மெல்ல லட்சுமியின் அக்கறையாளர் அவதாரமெடுத்து அவரை அண்டர்டேக் பண்ண ஆரம்பித்தார்.
அதாவது பி.சாலமனை கேட்காமல் ல.மேனன் புதிய படம் எதுவும் ஒப்புக்கொள்ளக்கூடாது.
ஆரம்பத்தில் இந்த டீலுக்கு ஒத்துக்கொண்ட ல.மேன்னுக்கு பி.சாலமன் வருகிற எல்லாப் படங்களையுமே தட்டிக்கழித்தது சற்றே உதறலை உண்டாக்கியது.
‘அவன்லாம் ஒரு டைரக்டரா? நானே வேண்டாமுன்னு சொல்லிட்டேன். அந்தக்கம்பெனி சரியில்ல. சிக்குன உன்ன சின்னாபின்னா படுத்தியிருவானுக. அவனுகள்லாம் ஹீரோவா? ஒருத்தன் சின்னப்பைய. இன்னொருத்தன் மிமிக்ரி ஆர்டிஸ்ட். இவனுக ‘பில்லா ரங்காவா நடிச்சி யாரு பாக்குறது?/ வேண்டானுட்டேன். நீயெல்லாம் ஸ்ட்ரெயிட்டா அஜீத், விஜய் கூட நடிக்கவேண்டிய ஹீரோயின். அடுத்ததா நான் ஒரு அஜீத் படம் டைரக்ட் பண்ணப்போறேன். அதுல நீதான் ஹீரோயின்’’
இப்படியே ஒவ்வொரு படமாக ரிஜக்ட் பண்ணிக்கொண்டே வர, படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதியும் நெருங்கி வருவதால், சரி காத்திருந்தது காத்திருந்துட்டோம். ஜஸ்ட் இன்னும் ஒரு மாசம் வரைக்கும் வெயிட் பண்ணிட்டு அப்புறமா பறந்து எஸ்கேப் ஆயிடலாம்’ என்று பி. சாலமன் தோளிலேயே காத்திருக்கிறாராம் லட்சுமி மைனா.