’’சமீபகாலமாக நான் சில கோயில் வாசல்களில் பிச்சை எடுப்பதுபோலவே அடிக்கடி கனவு வருகிறது. இதுபோதாதென்று, குடியிருக்க வீடின்றி நான் ப்ளாட்பாரத்தில் வசிப்பது போலவே சில தினங்களாக பத்திரிகையாளர்கள் சித்தரித்துவருவதை நான் எந்த சாமியாரை கட்டிக்கொண்டு அழுது சொலவது?’ என்று கதறி கண்ணீர் விடுகிறார் நடிகை ரஞ்சிதானந்தா.
தி.நகரில் ஒரு அபார்ட்மெண்டில் இதுவரை வசித்து வந்த ரஞ்சிதாவுக்கு சக குடியிருப்பாளர்களின் தொந்தரவால், இனியும் அங்கே தொடரமுடியாத நிலை. ‘’படம் நடிச்சி பத்து வருஷத்துக்கும் மேல ஆச்சி. ஆனா நயன் தாராவைப் பாக்க கூடுற மாதிரியில்ல, இவாளைப் பாக்குறதுக்கு ஜனங்க கூடுறா’’ என்பது போன்ற கமெண்டுகளை அபார்ட்மெண்ட்வாசிகளிடமிருந்து அடிக்கடி கேட்க நேர்ந்து காது ‘சேதுவாக மாறிவிடவே, சில வாரங்களுக்கு முன்னதாகவே தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவாவை போனில் பிடித்த ரஞ்சிதா , அவரிடம் தனது பரிதாப நிலையை எடுத்துச்சொல்லியிருக்கிறார்..
‘’ நித்தியானந்தாவுக்கே நித்திய கண்டம் பூரண ஆயுசுங்கிற மாதிரி ஆடி ஓடி அலையிறதுனால எங்க பிரச்சினைகலையெல்லாம் காது குடுத்து கேக்கவே அவருக்கு நேரம் இல்லை. போனாப்போகுதுன்னு கொஞ்சம் கேப் விட்ட பத்திரிகைகாரங்க, பழையபடி எங்கூட கும்மியடிச்சி குடும்பம் நடத்த ஆரம்பிச்சிட்டாங்க. நீங்கதான் சார் என்னைக் காப்பாத்தனும். வேணும்னா வாடகை கூட தர்றேன் சார்’’
சிவாவிடம் இவ்வளவு பரிதாபமாக ரஞ்சிதா வைத்த கோரிக்கையை அவர் கிஞ்சித்தும் செவி சாய்க்கவில்லை,
‘’ இங்க பாரும்மா ரஞ்சிதா, இப்ப நான் யூஸ் பண்ணிக்கிட்டிருக்க ஆபீஸ் உன்னோடதுதான். நான் இல்லைன்னா சொன்னேன். ஆனா என்னால உன்னோட அவசரதுக்காக தடாலடியா உடனே காலிபண்ண முடியாது. ஜஸ்ட் ஒரு ரெண்டு வருஷம் டைம் குடு. காலி பண்ண ட்ரை பண்றேன். இப்பிடி அடிக்கடி போன் பண்ணி எனக்கும் உனக்கும் லிங்க் இருக்க மாதிரி இழுத்துவிட்டுராத’’ என்ற அட்வைஸோடு போனை கட் பண்ணிவிட்டாராம் சிவா.
குடியிருக்க சொந்தவீடே கிடைக்காதபோது, நமக்கு யார் வாடகைக்கு வீடு தரப்போகிறார்கள் என்று நொந்து நூடுல்ஸ் ஆகி அலைகிறார் ரஞ்சிதா.
யாராவது பெரிய மனசு படைச்சவங்க ரஞ்சிதாவுக்கு ஒரு வீட்டை வாடகைக்கு கொடுத்து, அவரோட வீட்டுக்காரரா, அதாவது ஹவுஸ் ஓனரா ஏன் மாறக்கூடாதுன்னு கேக்குறேன்.