தமிழ், தெலுங்கில் சொல்லிக்கொள்ளும்படியாக, உருப்படியான படங்கள் ஏதுமின்றி, டம்மி சம்பளத்தில், மோகன்லாலுடன் ‘ரன் பேபி ரன்’ படத்தில் சீனியர் ஜர்னலிஸ்டாக நடித்திருக்கும் அமலாபாலுக்கு, உண்மையில் பத்திரிகையாளர்கள் என்றாலே ரொம்பவே அலர்ஜி.
இயக்குனர் எல். விஜய்க்கும் தனக்கும் இடையில் நிலவி வந்த புனிதமான உறவை கொச்சைப்படுத்தி, அவரிடமிருந்து பிரித்ததோடல்லாமல், ஒரு நல்ல நண்பராக பழகி அடையாறில் தனக்கு ஒரு பங்களா வாங்கித்தரும் அளவுக்கு நெருங்கி வந்த ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ படத்தின் பினாமி டைரக்டர் எல்ரெட் குமாரையும் தன்னிடமிருந்து பிரித்த பெரும் பாவிகள் பத்திரிகையாளர்களே என்று திடமாக, திரவமாக நம்புகிறார்.
இப்படிப்பட்ட தீயசக்திகளிடமிருந்து தன்னைக்காக்க வேண்டியது தனது மேனேஜரின் தலையாய கடமை என்று நினைத்தோ என்னவோ, நடிகை தொழிலுக்கு வந்த சுமார் இரண்டே வருடங்களில், காஸ்ட்யூம்களை கழட்டி மாற்றுவதுபோல், இதுவரை எட்டு மேனேஜர்களை மாற்றி தற்போது ஒன்பதாவதாக மேனேஜர் ஒருவரை நியமித்திருக்கிறார்.
முதல்பட வாய்ப்புக்காக கேரளாவிலிருந்து கிளம்பி வரும்போது, தனது கைக்காசில் அமலாவை டிக்கட் போட்டு டிக்கட்டாக அழைத்துவந்த சிபு என்பவரில் தொடங்கி, விக்ரம் மேனேஜர் கிரி வழியாக பயணித்து தற்போது தங்கதுரை என்பவரிடம் வந்து தங்கியிருக்கும் அமலாவிடம் ஒரு நல்ல குணம், யாரை மாற்றினாலும் அவருக்கு தகவலே தெரிவிப்பதில்லையாம்.
இப்போது லேட்டஸ்டாக நியமனம் செய்யப்பட்டிருக்கும் மேனேஜரிடமும், ‘ தப்பா நினைச்சுக்காதீங்க. இந்த பத்திரிகையாளனுகள நெனச்சாலே எனக்கு பத்திக்கிட்டு வருது. அதுக்கு நீங்கதான் ஒரு முடிவு கட்டணும். என்னப்பத்தி பத்திரிகையில எக்குத்தப்பா ஏதாவது வந்தா, வழக்கம்போல உங்களுக்கு தகவல் கூட தெரிவிக்காம கல்தா குடுத்துடுவேன்’ என்று எச்சரித்தே பணியில் அமர்த்தியிருக்கிறாராம்.
அதனால், இந்த புதிய மேனேஜரின் நலன் கருதி, சமீபத்தில் சென்னையில் நடந்த பார்ட்டி ஒன்றில், அ என்ற எழுத்தில் துவங்கி லா என்ற எழுத்தில் முடியும் பால் நடிகை, நிலைகொள்ளாத அளவுக்கு விஸ்கி அடித்து, ஹோட்டல் வராண்டாவில் வாந்தி எடுத்ததை நாங்களும் எழுதலை, நீங்களும் எழுதாம வுட்டுடுங்க.