கடந்த சனியன்று மாலை ‘மதுபானக்கடை’ படத்துக்கு விமரிசனம் எழுதிவிட்டு அதை இணையத்தில் ஏற்றுவதற்கான முயற்சியில் இருந்தபோது தான், நமது ‘ஹல்லோதமிழ்சினிமா’வின் ’அட்மின்’ நிர்வாகப்பக்கத்தில் ஏதோ தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டிருப்பதை அறிய முடிந்தது.
நமது இணையம் துவங்கி, எட்டு மாதங்கள் கூட முற்றுப்பெறாத நிலையில், இப்படிப்பட்ட இடர்கள் நேர்ந்திருப்பது, இது நான்காவது முறை.
இது ஏதோ ’தீவிர’ ரசிகர்களின் கைவண்ணமா அல்லது இணையங்களில் அடிக்கடி நிகழும் சாபக்கேடா என்பது குறித்து எனக்கு எதுவும் விளங்கவில்லை.
‘’ ஏன் அங்கிள், உங்க சைட்டுக்கு மட்டும் அடிக்கடி இப்பிடி நடக்குது?’ என்று இலியாணா செல்போனில் ஏக்கத்துடன் சிணுங்கியபோது என்னிடம் பதில் சொல்ல வார்த்தைகள் இல்லை.
அதற்கும் ஒரு படி மேலேபோய், நயன் தாரா ‘ hello my darling tamilcinema, GET STARTED SOON’ என்று எழுதி பூங்கொத்து அனுப்பியதைப் பார்த்தபோது கொஞ்சம் கெத்தாகவே இருந்தது.
‘ராமசாமி நல்லவனுக்கு ஆண்டவன், அப்பப்ப இம்சையைக்குடுப்பாண்டா, ஆனா கைவிடமாட்டான்’ என்ற வடக்கம்பட்டி ராமசாமியின் வாசகங்களை மனதில் இறுத்தி, உங்கள் ஆதரவோடு மறுபடியும் பயணம்.