முகநூல், துவிட்டர்களின் தட்பவெப்ப நிலையை கடந்த மூன்று தினங்களாக தீர்மானித்துக்கொண்டிருக்கும் ஆண்ட்ரியா, அனிருத் முத்தப் பரிமாற்றங்கள் குறித்து இருவருமே மவுனமாக இருந்துகொண்டிருந்த நிலையில், ஒரு தெலுங்கு இணையதளத்துக்கு மட்டும் ஆஃப் த ரெகார்டாக வாயைத்திறந்திருக்கிறார் ஆண்ட்டி’ரியா.
‘மேற்படி படம் சுமார் பதினெட்டு மாதங்களுக்கு முன்பு, நானும் அனிருத்தும் தீவிரமாக காதலித்து வந்தபோது எடுக்கப்பட்டது. எனக்கும் அனிருத்துக்கும் இடையில் இருந்த வயது வித்தியாசத்தை [ஆண்ட்டி 29, அனில் 21 ] காரணம் சொல்லி எங்களுக்கு நெருக்கமான நண்பர்கள் தொடர்ந்து எச்சரித்ததாலும், வேறு சில வெளியே சொல்லமுடியாத காரணங்களுக்காகவும் நாங்கள் அப்போதே பிரிந்துவிட்டோம். அடுத்து எங்களுக்குள் பேச்சுவார்த்தை கூட இல்லை.
இப்போது இணையதளங்களில் வெளியிடப்பட்டிருக்கும் புகைப்படங்களைப் பார்த்து நான் வெட்கமோ வேதனையோ அடையமாட்டேன். இதற்கு பதில் சொல்ல பயந்து ஓடி ஒளிய மாட்டேன். சினிமாவில் நடிகையாக ,பாடகியாக நான் சாதிக்கவேண்டியது எவ்வளவோ இருக்கிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட, என் நீண்டநாள் ஆசை நிறைவேறும் வண்ணம் இசைஞானி இளையராஜா இசையில்’ குண்டெல்ல கோதாரி’ படத்துக்காக ஒரு பாடலைப் பாடினேன்’ என்கிறார் ஆண்ட்ரியா.
உதட்டோடு உதடு முத்தம் கொடுத்ததை இவ்வளவு சாதாரணமாக ஆண்ட்டிரியா எடுத்துக்கொண்டதைத்தொடர்ந்து, ’தமிழ் நாட்டில் அடுத்த வருஷத்துல இருந்து மதுவிலக்கு. பட் ஆண்ட்டி உன் இதழ் மட்டும் எப்போதும் விதிவிலக்கு’ என்று டியூட் போட்டு சில யங் இசையமைப்பாளர்கள் காத்திருப்பதாகத் தகவல்.